செய்திகள்

பெற்றோரிடம் கட்டாயக் கையெழுத்து; தனியார் பள்ளி சர்ச்சை!

கல்கி

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் அதிர்ச்சியளித்த நிலையில், ''எங்கள் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பாகாது''  என கோவையில் தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகம், பெற்றோர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கியதால் புது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதயடுத்து அங்கு வெடித்த கலவரத்தில் அங்கு 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. பள்ளி வகுப்பறையும் சேதமடைந்தது.

இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து தனியார் பள்ளி தாளாளர், ஆசிரியைகள் உட்பட 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளி நிர்வாகம் வேலை நிறுத்த போராட்டமும் அறிவித்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவிகள் தற்கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இது தனியார் பள்ளி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் கோவையிலுள்ள ஒரு தனியார் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி ஒரு விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்து வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ''இந்த பள்ளிக் குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்காது'' என்ற படிவத்தில் பெற்றோரிடம் கட்டாயக் கையெழுத்து வாங்குவதாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

அப்படி கையெழுத்திட மறுக்கும் பெற்றோரிடம், அவர்கள் குழந்தைகளுக்கான டி.சி-யைப் பெற்றுகொண்டு பள்ளியை விட்டு  செல்லுமாறு வற்புத்தப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அந்த பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது;

'' பொதுவாக எல்லா பள்ளிகளிலும் இதுபோன்ற படிவம் வாங்குவது சகஜம்தான். ஆனால் பெற்றோர்களை கட்டாயப்படுத்துவது இல்லை''  என தெரிவித்தனர். 

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT