அமெரிக்காவில் பிரபலமான மாஸ் மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமான என்பிசி யுனிவர்சல்- ன் விளம்பரப் பிரிவின் தலைவரான லிண்டா யாக்காரினோ ( Linda Yaccarino ) தற்போது டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
எலான் மஸ்க் தனது நிறுவனங்களின் செயல்பாடுகளை எளிமையாக பிற நிறுவனங்களில் செய்வது போல் டிவிட்டரிலும் சி இ ஓ பதவியை ராஜினாமா செய்து, இப்பதவியில் பெண் தலைவர் ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். அவர் தான் தற்போது தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள லிண்டா யாக்காரினோ. டிசம்பர் மாதம் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதிவியை எடுக்கும் அளவுக்கு முட்டாள் தனமாக யாரையாவது கண்டால், நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன் என டிவீட் செய்தது பரபரப்பினை ஏற்படுத்தியது.
லிண்டா யாக்காரினோ 2011 முதல் NBC யுனிவர்சல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் . சேர்பர்சன் பதவியில் இருந்துக் கொண்டு உலகளாவிய விளம்பரம் மற்றும் கூட்டாண்மை பிரிவை நிர்வாகம் செய்து வந்தவர். இதற்கு முன், கேபிள் பொழுது போக்கு மற்றும் டிஜிட்டல் விளம்பர விற்பனைப் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.
லிண்டா யாக்காரினோ Turner நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர் . Turner நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது நிர்வாக துணைத் தலைவர்/ சிஓஓ பதவியில் விளம்பர விற்பனை, மார்கெட்டிங் மற்றும் கையகப்படுத்துதல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். லிண்டா யாக்காரினோ அமெரிக்காவின் பென் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் முன்னாள் மாணவர், இப்பல்கலைக் கழகத்தில் லிப்ரல் ஆர்ட்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது