செய்திகள்

மகாத்மா காந்தி சட்ட பட்டம் பெற்றவரல்ல, அவருடையது வெறும் மெட்ரிகுலேஷன் படிப்பு தான்! என்று பேசி சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்!

கார்த்திகா வாசுதேவன்

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசப்பிதா மகாத்மா காந்தி எந்த சட்டப் படிப்பில் எந்தப் பட்டமும் பெற்றிருக்கவில்லை என்றும், உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ மட்டுமே அவரது தகுதி என்றும் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

“மகாத்மா காந்தி சட்டப் பட்டம் பெற்றவர் என்று படித்தவர்கள் மத்தியில் தவறான கருத்து உள்ளது. காந்திக்கு எந்தப் பட்டமும் இல்லை, ”என்று லெப்டினன்ட் கவர்னர் சின்ஹா வியாழக்கிழமை ஐடிஎம் குவாலியரில் பேசி இருக்கிறார். குவாலியரில் டாக்டர் ராம் மனோகர் லோஹியா நினைவு சொற்பொழிவுக்கான முக்கிய உரையை ஆற்றும் போது அவர் இப்படிக் கூறி இருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.

"காந்தி படிக்கவில்லை என்று யார் சொல்வார்கள்? அப்படிச் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு ஒரு பல்கலைக் கழகப் பட்டமோ அல்லது தகுதியோ இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? காந்திக்கு ஒரு பட்டம் இருந்தது என்று நினைக்கும் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். உண்மையில் அவரிடம் சட்டம் பயின்றதற்கான பட்டம் என்று எதுவும் இல்லை, அவரது ஒரே தகுதி உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ மட்டுமே, அவர் சட்டப் பயிற்சிக்குத் தகுதியானவர், ஆனால் பட்டம் பெறவில்லை, அவர் எவ்வளவு படித்தவர் என்று பாருங்கள், ஆனால், அவர் நம் தேசத்தின் தந்தை’ என்றார் மனோஜ் சின்ஹா.

பட்டம் பெறுவதால் மட்டுமே ஒரு மனிதருக்கு சிறந்த தகுதிகள் வந்துவிடாது, அது வெறும் பட்டம் மட்டுமே. கல்வி என்பது ஒரு மனிதனின் சிறப்பான தன்மைகளை வெளிக்கொண்டு வருவது. எனவே கல்வியையும், பட்டத்தையும் தொடர்பு படுத்திக் கொண்டு நிறைய பட்டங்களைப் பெற வேண்டும் என்று மட்டுமே நீங்கள் நினைத்து விடக்கூடாது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.

என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT