அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் மெக்டொனால்ட் உணவு நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு நகர்புறப் பகுதிகளில் தனது கிளையை பரப்பி நடத்தி வருகிறது. உயர்தர உணவு வகைகள், வெளிநாட்டு உணவு வகைகளை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் மெக்டொனால்ட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி கூறியிருப்பது, இந்தியாவில் தக்காளி விளைச்சல் குறைந்து இருப்பதால் தக்காளி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எங்கள் நிறுவனத்தின் கிளைகளில் தற்காலிகமாக தக்காளி பயன்பாடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தக்காளி தட்டுப்பாடு நீங்கி இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் தக்காளி பயன்பாடு மீண்டும் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். அதே நேரம் தரமான தக்காளிகளை பயன்படுத்துவதில் எங்கள் நிறுவனம் உறுதி கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இப்படி பெரிய நிறுவனங்களே தக்காளி தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட, எளிய மக்களை பற்றி சொல்லவா வேண்டும். அதே வேளையில் நெட்டிசன்ங்கள் "தக்காளி வாங்க பேங்கில் லோன் கேட்பது" போன்றும், "தக்காளி சோறு சாப்பிடுபவர் பணக்காரர்" போன்றும் கேலி செய்து மீம்ஸ்களை போட்டு நெட்டிசன்ங்கள் சமூக வலைதளங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர்.