புதிதாக வெளிவந்த திரெட்ஸ் செயலியில் முதன் முறையாக 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று கின்னஸ் சாதனை புரிந்தார் MrBeast என்ற பிரபல யூட்யூபர்.
கடந்த புதன்கிழமை அன்று ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அறிமுகம் செய்தார். நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அந்த அக்கவுண்ட் விவரங்களை கொண்டு தானாகவே உங்களுக்கென்று ஒரு ப்ரோஃபைலை Threads செயலியில் உருவாக்கிக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இந்த செயலி அறிமுகமான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பயனர்கள் இதில் இணைய ஆரம்பித்தனர்.
OpenAi நிறுவனத்தின் ChatGPT இதற்கு முன்னதாக ஐந்து நாட்களில் ஒரு மில்லியன் பயன்களைக் கடந்திருந்தது. அந்த சாதனையை தற்போது Threads செயலி முறியடித்துள்ளது. ஒரு மில்லியன் பயனர்களைப் பெறுவதற்கு Instagram இரண்டரை மாதங்களும், spotify ஐந்து மாதங்களும், Facebook 10 மாதங்களும் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த MeBeast என்ற பிரபலமான Youtube தளத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவர், Threads செயலியில் முதல் 10 லட்சம் ஃபாலோயர்களைக் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி கடந்த 48 மணி நேரத்தில் மிஸ்டர் பீஸ்ட் சுமார் 2.7 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
Youtube என்ற மிகப்பெரிய டிஜிட்டல் கடலில் பல யூடியூபர்கள் பார்வையாளர்களைக் கவரவும் டிஜிட்டல் உலகில் அழியாத முத்திரையைப் பதிக்கவும் முயற்சி செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருந்த மிஸ்டர் பீஸ்ட், தனது ஆர்வம் மற்றும் தனித் திறமையால் யூடியூப் தளத்தில் முக்கியத்துவம் பெற்றார். மற்ற யூடியூபர்கள் தன்னுடைய பர்சனல் பிராண்டை உருவாக்கவும், பணம் சம்பாதிக்கவும் பதிவுகளைப் போடும்போது, இவர் மட்டும் சற்று வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு சேலஞ்ச் செய்வது போன்ற காணொளிகள் பதிவேற்றி வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் இருந்துகொண்டே உலகம் முழுவதுமுல்ல பார்வையாளர்களைத் தன்வசம் வைத்துள்ளார். மேலும் தனது சப்ஸ்கிரைபர்களுக்கும் அவ்வப்போது விளையுயர்ந்த கிப்ட் வழங்குவதில் பெயர் போனவர். அவர் எடுக்கும் ஒரு வீடியோக்காகவே மிகப்பெரிய தொகையை செலவு செய்வதிலும் வல்லவர்.
தொடக்கத்தில் திரட் செயலியில் மிஸ்டர் பீஸ்ட் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் மத்தியில் அதிக ஃபாலோயர்கள் யாருக்குக் கிடைக்கிறது என்பதற்கான போட்டி கடுமையாக இருந்தது. ஆனால் 48 மணி நேரம் கடந்த பிறகு, மார்க் ஜுக்கர்பெர்குக்கு 2 மில்லியன் பாலோயர்கள் மட்டுமே கிடைத்தனர். ஆனால், மிஸ்டர் பீஸ்ட் எனப்படும் ஜிம்மி டொனால்டின் 2.8 மில்லியன் பாலோயர்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.
இதுவரை அந்த தளத்தில் நான்கு பதிவுகளைப் போட்டுள்ள மிஸ்டர் பீஸ்ட், கடைசியாக போட்ட பதிவில், கடந்த 48 மணி நேரத்தில் தன்னை பாலோ செய்த யாருக்காவது ஒரு டெஸ்ட்லா காரை பரிசாகக் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.