அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 'நீட்' தேர்வு இந்த வாரம் துவங்க உள்ள நிலையில் +2 தேர்ச்சி பெரும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களில் பொருளாதாரத்தில் வசதி உள்ள குடும்பத்தினர் தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர், ஆனால் பொருளாதாரத்தில் வசதி குறைவாக உள்ள குடும்பத்தினரால் பயிற்சி எடுக்க முடியவில்லை.
இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்ளுக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச நீட் பயிற்சி இரண்டு ஆண்டுகளாக 'ஆன்லைன்' வழியில் வழங்கப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டுக்கான பயிற்சியை நேரடி வகுப்பாக நடத்த, தமிழக பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அரசு பள்ளி வளாகங்களில், 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளியிலும், அதிக மதிப்பெண் பெறும் மற்றும் நீட் தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ - மாணவியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்த வார இறுதியில் இருந்து, நீட் இலவச பயிற்சி துவங்கப்பட உள்ளது.