நெட்பிளிக்ஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருக்கும் ரீட் ஹேஸ்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாகக் அறிவித்தார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் நெட்பிளிக்ஸ் இன்க் ஸ்ட்ரிமிங் சேவைத் துறையில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தாலும், அதன் வருவாய் ஈட்டும் முறைகள் மற்றும் திட்டங்கள் குறித்து முதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்குப் பெரும் கேள்விகள் உள்ளது.
நெட்ஃபிக்ஸ் தொடங்கப்பட்ட காலத்தில் பெரும் வரவேற்பையும் நல்ல வருமானத்தையும் பெற்று வந்தது. ஒரே OTT தளமாக இருந்த போது ராஜா போல் உலா வந்தது. அதன்பின்னர் நெட்ஃபிக்ஸுக்கு போட்டியாக அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற புதிய OTT தளங்கள் உருவானது. இதனால் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தால் பெரிய பயனர் எண்ணிக்கைகளை அடைய முடியவில்லை.
இந்த நிலையில் பல மாத முயற்சிகள் பலன் அளிக்காத காரணத்தால் நெட்பிளிக்ஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருக்கும் ரீட் ஹேஸ்டிங்ஸ் வியாழக்கிழமை முதல் தான் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாகக் அறிவித்தார்.
தற்போது நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனத்தின் கட்டுப்பாட்டைத் தற்போது அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ் மற்றும் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் டெட் சரண்டோஸ் மற்றும் கிரெக் பீட்டர்ஸ் தலைமை நிர்வாகிகள் பதவியைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். ரீட் ஹேஸ்டிங்ஸ் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றுகிறார். இந்த பணி மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம் .
நெட்பிளிக்ஸ் நிறுவனப் பங்குகள் கடந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 38 சதவீதம் சரிந்த நிலையில், வருட இறுதியில் இந்நிறுவனம் கணித்ததைக் காட்டிலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெறாத காரணத்தால் பல ஏற்ற இறக்கம் மத்தியில் நெட்பிளிக்ஸ் பங்குகள் 2023 ஆம் ஆண்டின் 19 நாளில் 7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.