News 5 
செய்திகள்

News 5 – (14-08-2024) நாட்டின் முதல் தேசியக் கொடி..!

கல்கி டெஸ்க்

ஐரோப்பாவை தாக்கிய வெப்ப அலை!

Heat wave hit Europe!

ஐரோப்பாவை தாக்கிய வெப்ப அலையால் கடந்தாண்டு 47 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பம் சார்ந்த உடல் உபாதைகளால் வயதானவர்கள் தான்  அதிகம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

நாட்டின் முதல் தேசியக் கொடி..!

The first national flag of the country

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரத்திற்கு பின் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக ஏற்றப்பட்ட மூவர்ண தேசியக் கொடி, அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 12 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட மல்பெரி பட்டு துணியால் தயாரிக்கப்பட்ட இந்த தேசியக் கொடி பொக்கிஷமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

விமான கட்டணம் உயர்வு!

Airfare hike!

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் இரு மடங்காக உயர்ந்துள்ளது. சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து விடுமுறை வருவதை ஒட்டி, சொந்த ஊர் செல்ல அதிக மக்கள் ஆர்வம் காட்டுவதால் கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கங்குவா: ரசிகர்களிடம் இருந்து ஆதரவு பெருகியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சி!

Kanguva

சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள 'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், “கங்குவா ட்ரெயிலருக்கு நீங்கள் பொழிந்து வரும் அன்பிற்கு ரொம்ப நன்றி. மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதைப் போல உணர்கிறேன். ரசிகர்களிடம் இருந்து ஆதரவு பெருகியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சி" என படத்தின் இயக்குநர் 'சிறுத்தை' சிவா தெரிவித்துள்ளார். 

வினேஷ் போகத்தின் மேல்முறையிட்டு மனு மீதான தீர்ப்பு 3-வது முறையாக ஒத்திவைப்பு!

Vinesh Bhog

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த இறுதிப் போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையிட்டு மனு மீதான தீர்ப்பு 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 16-ம் தேதி இரவு 9.30 மணிக்கு வழங்கப்படும் என விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT