ஒரு ஸ்மார்ட் போனில் பல whatsapp கணக்குகளை பயன்படுத்தும் தெறி மாஸ் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டு வருகிறது. அது பற்றிய முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உலகிலேயே அதிகப்படியான நபர்கள் பயன்படுத்தி வரும் சேட்டிங் செயலி எதுவென்றால் அது whatsapp தான். அந்த அளவுக்கு மக்கள் பயன்படுத்தும் எளிதான அம்சங்களை whatsapp வழங்குகிறது. அந்நிறுவனமும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் நீண்ட காலமாக பலரும் எதிர்பார்த்த புதிய வசதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதாவது ஒரே ஸ்மார்ட் போனில் ஒன்றுக்கும் அதிகமான வாட்ஸாப் கணக்குகளை பயன்படுத்தும் புதிய அம்சத்தை நிறுவனம் கொண்டுவரவுள்ளது. இதற்கான சோதனைகள் தற்போது நடந்து வருகிறது. இதுவரை இரு WhatsApp கணக்குகளை பயன்படுத்த விரும்புவோர் தனித்தனியான சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக புதிய வசதியை வாட்ஸ் அப் கொண்டு வருகிறது.
இந்த புதிய வசதி விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வமாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதெல்லாம் அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் அதில் இரண்டு சிம்களை உபயோகிக்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த புதிய அம்சம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இனி நாம் பயன்படுத்தும் இரண்டு சிம்களுக்கும் தனித்தனியாக whatsapp உபயோகிக்கலாம். ஒரு சில சாதனங்களில் eSIM வருவதால் அதிலும் இந்த அம்சம் வேலை செய்யும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் முதலில் பீட்டா பதிப்புகளில் மட்டுமே வெளிவரும். இதில் பயனர்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகே அனைவரும் பயன்படுத்தும்படி இந்த அப்டேட் வழங்கப்படும்.
இந்த அம்சத்தை எனேபிள் செய்ய, செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, ப்ரொபைல் படத்திற்கு கீழே உள்ள Drop Down என்பதை கிளிக் செய்தால், அதில் உங்களின் மற்றொரு கணக்கை சேர்க்க முடியும். அதில் உங்களின் புதிய போன் நம்பரை பதிவிட்டால் இரண்டாவது whatsapp கணக்கு நீங்கள் பயன்படுத்த தயாராகிவிடும்.
இந்த அம்சத்தை நீங்கள் பெறுவதற்கு உங்கள் வாட்ஸ் அப் புது வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் இதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்போது நீங்கள் பயன்படுத்த முடியும். இந்த அட்டகாசமான அம்சத்தால் வாட்ஸ் அப் பயனர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.