செய்திகள்

Netflix உதவியால் காணாமல் போன சிறுமி மீட்பு!

எல்.ரேணுகாதேவி

அமெரிக்காவில் உள்ள வட கரோலினா பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கைலா உன்போஹான் (Kayla Unbehaun) Netflix ஓடிடி தளத்தில் திரையிடப்பட்ட ஆவணப்படம் மூலமாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உலகளவில் கவனம் பெற்றுள்ளார்.

நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையான கொண்டு “Unsolved Mysteries Series’’ எனும் ஆவணப்படத்தில் “பெற்றோரால் கடத்தப்பட்ட குழந்தைகள்” எனும் தலைப்பில் ஆவணப்படம் ஒன்று திரையிப்பட்டுவருகிறது. இதில் ஒன்பதாவது அத்தியாயத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறுமி கைலா குறித்து ஆவணப்படம் வெளியானது. இந்த ஆவணப்படத்தை வட கரோலினா பகுதியில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர் தொடர்ச்சியாகப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படிதான் கைலா குறித்த ஆவணப்படத்தையும் அவர் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்குச் சிறுமி கைலா உன்போஹானின் முகத்தைச் சமீபத்தில் எங்கோ பார்த்தாக அவருக்குத் தோன்றியுள்ளது. கொஞ்சம் நிதானமாக யோசித்து பார்த்த அந்த நபருக்கு கைலாவை கடந்த வார இறுதியில் ஆஷெவில்லில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்தது நினைவுக்கு வந்தது. உடனே, அமெரிக்காவில் உள்ள சவுத் எல்ஜின் காவல் துறையினருக்குத் தகவல் அளித்த நபர் சிறுமி கைலா குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். தகவல் கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் சவுத் எல்ஜின் பகுதியில் உள்ள இலினாய்ஸ் எனும் இடத்தில் ஹீதர் அன்பெஹான் எனும் தன் தாயுடன் சிறுமி இத்தனை ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்துள்ளார்.

பின்னர், தாய் ஹீதர் அன்பெஹானாவிடம் மேற்கொண்ட விசாரணையில், “கணவர் ரியான் இஸ்கெர்காவுடன் விவாகரத்து பெற்றுவிட்டதாகவும். ஆனால், குழந்தை கைலா தந்தையுடன்தான் வளரவேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு அளித்ததாகவும், வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் குழந்தை என்னுடன் இருக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், தன்னுடைய குழந்தை கைலாவை பிரிய மனமில்லாமல் அவர் வார இறுதி நாட்களைக் கழிக்கக் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 5 ம் தேதி வீட்டிற்கு வந்தபோது அவரை வேறு ஒரு இடத்தில் மறைத்துவைத்து குழந்தை காணாமல் போய்விட்டதாக, குழந்தையை மீண்டும் அழைத்து செல்ல வந்த கணவர் ரியானிடம் கூறி நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து தொலைந்துபோன தன் செல்ல மகளை பல்வேறு இடங்களில் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தேடித் திரிந்துள்ளார் ரியான்.

இந்நிலையில், தன்னுடைய 9 வயதில் தாயால் கடத்தப்பட்ட சிறுமி கைலா உன்போஹான் Netflix ஆணவப்படத்தின் மூலம் யாரோ முகம் தெரியாத நபர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டு, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் சிறுமி கைலாவை தந்தையுடன் ஒப்படைக்கும் போது ரியான் இஸ்கெர்கா தன்னுடைய பல ஆண்டு சோகத்தை எல்லாம் கண்ணீரால் கரைத்திருக்கிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT