செய்திகள்

ஜூன் 15 ல் முடிவடைகிறது மீன்பிடி தடைக்காலம்!

கார்த்திகா வாசுதேவன்

கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 15ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதன் காரணமாக வடசென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வியாழன் முதல் மீண்டும் மீன்பிடி தொழில் சூடுபிடிக்கவிருப்பதாகத் தகவல். அதற்காக ஆழ்கடல் படகுகள் வியாழன் அன்று தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னோட்டமாகக் கடைசி நேர பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீன்களை சேகரித்து வைக்க உதவும் தொட்டியை சுத்தம் செய்தல், ஐஸ் பாக்ஸ் புதுப்பித்தல், ப்ரொப்பல்லர் மாற்றுதல் மற்றும் மேலோட்டத்தை பலப்படுத்துதல் போன்ற முக்கியமான பராமரிப்புப் பணிகள் அசுர கதியில் நடந்து வருகின்றன.

இந்த விஷயம் குறித்துப் பேசுகையில் ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் சங்க செயலாளரான பி.முத்துக்குமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது என்னவெனில் தற்போது காசிமேடு துறைமுகத்தில் இருந்து சுமார் 1,000 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இயக்கப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு மராமத்து பணிகள் முடிவடைந்த நிலையில், கடலுக்கு செல்ல தயாராக உள்ளது. மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்த மூன்று மாதங்களில், வழக்கம் போல், சிறிய ஃபைபர் படகுகள் மட்டுமே கடலுக்குச் சென்றன, ஆனால் அவை அனைத்துமே இந்த முறை மிகக் குறைந்த வருமானத்துடன் திரும்பி வந்தன. பல பைபர் படகு ஆபரேட்டர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.

- என்று கூறினார்.

எனவே மீன்பிடி தடை காலத்தை அக்டோபர்-டிசம்பர் காலத்திற்கு மாற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனெனில், தற்போதுள்ள முறையின் கீழ், வருடாந்திர மீன்பிடி தடையானது ஏப்ரல் நடுப்பகுதி முதல் ஜூன் நடுப்பகுதி வரை நீடிக்கும், ஆனால் அது முடிந்தவுடன் உடனடியாக மீன் பிடிப்பு அளவு அதிகரிக்காது, வடகிழக்கு பருவமழை சென்னை கடற்கரையில் தீவிரமாக உள்ளது. எனவே தடை அகன்று மீனவர்கள் கடலுக்குள் இறங்குவதற்குள் மழைக்காலம் வந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாட்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறிய முத்துக்குமரன்,எனவே, இந்த முறை மீனவர்கள் அதிகளவில் மீன்பிடிக்கும் வகையில், மீன்பிடி தடை கால தேதிகளை மாற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்றார்.

இதன் மூலம் கிழக்கு கடற்கரையோரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வரும் வியாழன் முதல் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி தடை விதிக்கப்பட உள்ளதால் மீன்களுக்கான தேவை மேலும் உயரக்கூடும். திருவள்ளூர் மாவட்டம் புலிக்காடு, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதிகளில் இருந்து சிறிய பைபர் படகுகள் மூலமாகப் பிடிக்கப்பட்டு வரும் கணவாய் மீன்களுக்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் மிகுந்த தேவை இருக்கிறது. அங்குள்ள மக்கள் இந்த மீன்களை விரும்பு உண்ணுகின்றனர். ஆனால், இம்முறையும் மீன்வளதுறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை முறையாக முடிக்கவில்லை. மாநில அரசு அதிகாரிகளின் இந்த அலட்சிய்ப் போக்கால் பல படகுகள் உண்மையான ஆபத்தில் இருக்கின்றன என்பது சில சிறிய மீன்பிடி படகு உரிமையாளர்களின் கவலையாக மாறி வருகிறது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT