செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த புதிய நாடாளுமன்றம்: எம்.பி சு.வெங்கடேசன்!

எல்.ரேணுகாதேவி

புதுடெல்லி கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது அதிர்ச்சி அடைந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயகத்தின் குரலாக விளங்கும் புதிய நாடாளுமன்றம் தலைநகர் டெல்லியில் கடந்த மே 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், நாடாளுமன்ற பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசின் நீண்டநாள் திட்டமான புதிய நாடாளுமன்ற அமைக்கவேண்டும் எனும் கனவு சமீபத்தில் மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவரை அழைக்காதது, தமிழ்நாட்டு மக்களின் ஓட்டுகளை பொறுவதற்காக மாதிரி செங்கோல் வழங்கப்பட்டது என பல்வேறு விஷயங்களை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது சர்ச்சையானது. மேலும், குடியரசு தலைவரை அழைக்காததை காரணம்காட்டி, 20க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்திற்கு சென்றுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்,“ புதிய நாடாளுமன்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக” கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடாபாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.சு.வெங்கடேசன் பேசியதாவது, “நேற்றை தினம் நாடாளுமன்றத்தின் ரயில்வே ஆலோசனை குழு கூட்டமும், கல்வி குழுவின் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள நான் வந்திருந்தேன். அப்போது, புதிய நாடாளுமன்றத்தை பார்வையிட்டேன்,அப்போது எனக்கு பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. குறிப்பாக புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் காட்சிகள் முழுதாக சனாதனத்தை விளக்கும் காட்சியாகவும் சமஸ்கிருதத்தை போற்றும் காட்சியாகவும்தான் இருக்கிறது. ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும் தேச விடுதலை போராட்டம் ஆகியவற்றின் எந்த அடையாளங்களும் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவில்லை. இன்னும் சொல்லபோனால் பாஜகவின் அலுவலகத்தைபோல புதிய நாடாளுமன்றத்தை வடிவமைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உள்ளே நுழைந்ததும் 30 அடி உயரத்திற்கு சாணக்கியரின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாணக்கியருக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அரசியல் சாசன போற்றப்படவேண்டிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்தை நினைவுப்படுத்த வேண்டிய தேவை என்ன, அதனை கடந்து உள்ளே போனால் சுமார் 250 அடி நிளத்தில் மிக பிரம்மாண்டமாக விஷ்ணுபுராணத்தில் பார் கடலை கடையும் காட்சி வார்ப்பு வடிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமும் பார் கடலை கடையும் காட்சி நாடாளுமன்றத்தில் இடம்பொறுவதற்கு என்ன சம்பந்தம் உள்ளது. அந்த இடத்தில் ஆங்கிலேயேர்களுக்கு எதிரான இந்தியர்களின் விடுதலை போராட்ட காட்சி இடம்பெற்றிருக்கவேண்டும். அதேபோல் அரசியல் சாசன புத்தகத்தில் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் புகழ்பெற்ற நந்தலால் போஸ் வரைந்த 22 ஓவியங்களில் 16 ஓவியங்களை புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற வைப்பதாக கூறி சில ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அரசியல் சாசனத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக கருதப்படும் எருது இடம்பெற்றிருக்கும். ஆனால், புதிய நாடாளுமன்றத்தில் முனிவர் ஒருவர் தவம் செய்துவது போன்ற ஓவியம் இடம்பெற்றுள்ளது. நந்தலால் போஸ் வரைந்த காவிய கால ஓவியங்களை இந்திய வரலாறு என வரையறுத்து புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற செய்துள்ளனர். இந்துத்துவா தத்துவ அடிப்படையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான என்பதை பதிவுச் செய்துகொள்கிறேன்” என்றார்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT