Thailand 
செய்திகள்

தாய்லாந்திற்கு செல்ல இனி விசா தேவையில்லை!

க.இப்ராகிம்

ந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்து வருவதற்கு விசா தேவை இல்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்றாக உள்ளது தாய்லாந்து. இந்திய சுற்றுலாப் பணிகளிலுனுடைய எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக விசா இல்லாத பயணத்திற்கு தற்போது தாய்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தாய்லாந்து அரசு சுற்றுலாவை மிகப் பிரதான வருவாயாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் அதிக அளவில் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாவிற்கு செல்வதால் தாய்லாந்தரசு இந்திய சுற்றுலாப் பணிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் நடைமுறையையும் மிக எளிதாக கையாண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அந்நிய செலாவணி கையிருப்பை விரிவு படுத்தவும் தாய்லாந்து அரசு சோதனை முயற்சியாக 2023 நவம்பர் மாதம் முதல் 2024 மே மாதம் வரை இந்தியாவில் இருந்து தாய்லாந்து வரும் பயணிகளுக்கு விசா தேவை இல்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும் விசா இல்லாமல் தாய்லாந்து வரும் இந்திய பயணிகள் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் எந்த பகுதிக்கும் செல்ல தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நடப்பு ஆண்டின் வரும் காலங்களில் தாய்லாந்து செல்லும் இந்தியப் பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று கடந்த வாரம் இலங்கை அரசு இந்திய பயணிகளுக்கு விசா தேவை இல்லை என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT