தேனி மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரித்து வந்த நிலையில் இந்த கோடை மழைகள் ஆறுதலை தருகிறது. இந்த கோடை மழை பொழிவு பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தற்போது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் பெரிதும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்னமும் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழைப்பொழிவு இருந்து கொண்டே உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டங்கள் கணிசமாக உயர்ந்துள்ளது.
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 52.99 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 784 கனஅடியாக உள்ளது. 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 41.30 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து 31 கன அடியாக உள்ளது . நீர் வெளியேற்றம் 0 கண்ணாடியாக உள்ளது.
126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 7.16 கன அடி . 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 27.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 04 கனஅடி . தண்ணீர் வெளியேற்றம் இல்லை.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.89 அடியாக உள்ளது. அனைத்து நீர்வரத்து 413 கன அடி. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.