செய்திகள்

நிலவுக்குப் போகவிருக்கும் அந்த 4 வீரர்கள் யார்?

கிரி கணபதி

ர்ட்டெமிஸ்-1 என்ற நாசாவின் திட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நிலவுக்கு அதை அனுப்பும் பணியில் நாசா செயல்பட்டு வருகிறது. ஆர்ட்டெமிஸ்-2 என்ற திட்டம் மூலமாக விண்வெளி வீரர்கள் நிலவின் சுற்றுவட்ட பாதை வரை பயணம் செய்து மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். ஆர்ட்டெமிஸ்-2 என்ற திட்டத்தை சில ஆண்டுகளாக நாசா ஆய்வு செய்து வருகிறது. இத்திட்டத்தை ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப் போகிறது. இதன் மூலமாக, வரும் 2025-ல் விண்வெளிக்கு மனிதர்கள் செல்ல இருப்பதால், இது சார்ந்த எதிர்பார்ப்புகள் அனைவரது மத்தியிலும் அதிகமாக இருந்து வருகிறது. 

கடைசியாக 1972 ஆம் ஆண்டு தான் மனிதன் நிலவுக்கு சென்றான். அதன் பிறகு ஆர்ட்டெமிஸ்-2 என்ற விண்கலம் மூலமாக மனிதர்கள் மீண்டும் நிலவுக்கு செல்லப் போகிறார்கள். இதில் பயணம் மேற்கொள்ளப் போகும் நான்கு விண்வெளி வீரர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா ஹம்மாக் கோச், ஜெர்மி ஹென்சன், ரீட்வைஸ்மேன் என்ற நான்கு விண்வெளி வீரர்களின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்று பேர் நாசா விண்வெளி மையத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொரு நபர் கனடா விண்வெளி ஏஜென்சியை சேர்ந்தவர். 

நிலவில் வீரர்கள் நீண்ட காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில்  இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதை வெற்றிகரமாக முடிக்க பல கட்ட சோதனை ஓட்ட ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தில் ஏவுதல் ராக்கெட் மூலமாக ஓரியன் விண்கலம் அனுப்பப்பட்டது போல், ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்திலும் சோதனைகள் செய்யப்பட இருக்கின்றன. அதாவது இதில் மனிதர்கள் செல்லும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதை சோதிக்கப் போகிறார்கள். 

ஆர்ட்டெமிஸ்-2 தனது சோதனை ஓட்டத்தை இன்னும் பத்து நாட்களில் தொடங்கவிருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த விண்கலம் மூலமாக நான்கு பேரும் சந்திர மண்டலத்தை அடைவார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது. இதில் செவ்வாய் கிரகத்தில் இருந்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரியான உணர்வு அளிக்கும் இடத்தை ஆய்வாளர்கள் உருவாக்க இருக்கிறார்களாம். இந்த இடத்தில் ஒரு வருட காலத்திற்கு நான்கு விஞ்ஞானிகளும் தங்கியிருப்பர். இதில் ஒரு கிச்சன், மெடிக்கல் ரூம், பணியாளர் குடியிருப்பு, உடற்பயிற்சிக் கூடம், பொழுதுபோக்கு, பயிர் வளர்ச்சி போன்ற அனைத்திற்கும் தனித்தனியான இடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழித்து நான்கு வீரர்கள் நிலவுக்கு செல்லவிருக்கும் செய்தி, உலகெங்கிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஒரு பெண்ணும், ஒரு கனடா விண்வெளி வீரரும், ஒரு கருப்பினத்தவரும் இடம்பெற்றுள்ள செய்தி உலமக்களின் கவனத்தை நாசாவின் பக்கம் ஈர்த்துள்ளது.

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

SCROLL FOR NEXT