ரஷ்யா உக்ரைன் போர்  
செய்திகள்

வாக்னர் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் பெலாரஸில் தஞ்சம்!

கல்கி டெஸ்க்

உக்ரைன் போருக்கான தலைமையிடமாக விளங்கிய ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் செயல்பட்ட ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை வாக்னர் ஆயுதக் குழு நேற்று முன்தினம் கைப்பற்றியது.

அப்போது ‘ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு மற்றும் ராணுவ தளபதி வாலரி ஜெரசிமோவ் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும். எங்களது வீரர்கள் இங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி செல்வார்கள். குறுக்கே யார் வந்தாலும் அவர்களை அழித்துவிடுவோம் என பிரிகோஸ் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, வாக்னர் படை வீரர்கள் தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரம் வரை முன்னேறி சென்றதாக தகவல் வெளியானதை அடுத்து மாஸ்கோவில் அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பின்னர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையாற்றிய அதிபர் விளாடிமிர் புதின் , ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, இறையாண்மைக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில், நமது ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது ‘மிகப்பெரிய துரோகம்’. கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். இதன் பின்னர் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவானது.

pudin

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து வாக்னா் குழு முக்கியப் பங்காற்றியது. குறிப்பாக அந்நாட்டின் பாக்முத் நகரைக் கைப்பற்றியது. எனினும் ரஷ்ய ராணுவத்தின் திறமையின்மை, ரஷிய பாதுகாப்புத் துறை சாா்பில் வாக்னா் குழுவுக்கு போதிய வெடிபொருள்கள் வழங்கப்படாததை ப்ரிகோஷின் விமா்சித்து வந்தாா். இந்தச் சூழலில், போரின்போது, வாக்னர் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசிமோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ரஷ்ய ராணுவ தலைவருக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியை தொடங்கிய வாக்னர் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ், அதிபர் விளாடிமிர் புதினின் மிரட்டலுக்கு பணிந்து ரஷ்ய அரசுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில், அவர் அந்த நாட்டைவிட்டு வெளியேறி பெலாரஸில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

SCROLL FOR NEXT