தற்போது இருக்கும் வைஃபையை விட பல மடங்கு திறன் கொண்ட, அதிவேக டேட்டா ஷேரிங்கை உள்ளடக்கிய வைஃபை 7 விரைவில் அறிமுகமாக உள்ளது.
நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி வியக்கத்தக்க அளவில் உள்ளது. இப்படி தற்போது வைஃபையில் கூடுதல் வேகத்தை இணைத்து வெளியிடப்பட உள்ள புதிய வைஃபை அப்டேட் வியக்கத்தக்க அளவில் இணைய வேகத்தை அளிப்பதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வைஃபை என்பது டேட்டாக்களை பகிரக்கூடிய இணைய செயலியாகும். இதன் மூலம் டேட்டாக்களை பகிர்வதோடு தகவல்களையும், புகைப்படம், வீடியோக்கள் போன்றவைகளையும், தரவுகளையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
தற்போது மக்கள் பயன்படுத்தக்கூடிய வைஃபை என்பது 6E சேவையாகும். இதுவே மக்களுடைய தேவைகளை பெரிய அளவில் பூர்த்தி செய்து இருக்கூடிய நிலையில் தற்போது சூப்பர் பாயிண்ட் டேட்டா ஷேரிங் கொண்ட அதிவேக சேவையை வழங்கக்கூடிய வைஃபை 7 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வைஃபை அதிவேக முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் வைஃபை 2.4 GHz, 5 GHz என்று இருந்து அதன் பிறகு தற்போது வைஃபை 6 GHz பயன்பாட்டில் உள்ளது. இது 160 MHz வேகத்தை பரிமாறக்கூடியது. ஆனால் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிற வைஃபை 7 - 320 MHz வேகத்தை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் பல மடங்கு வேகத்தை பெற்று விரைவாக டேட்டா ஷிரிங்கை பயன்படுத்த முடியும்.
இந்த அதிவேக செயல்பாடு பல்வேறு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களோடு இணைத்து வீடுகள் மற்றும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.