உங்கள் மொபைலின் ரேம்(RAM) வேகத்தை அதிகரிப்பது ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த உதவும். ஆனால், நாம் ஏதோ சில அப்ளிகேஷன்ஸ்ஐ உபயோகிக்கும்போது, நம் மொபைல் சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த வேகத்தில் செயல்படாது. ஆனால், மற்ற மொபைல்களில் அது சரியாக செயல்படும். அது ஏன்? அதை எப்படி சரி செய்துகொள்ளலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
மென்பொருள் புதுப்பிப்புகளை சரிபார்க்கவும்(Check for Software Updates):
உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தின் மென்பொருளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளுங்கள். உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் தங்கள் மென்பொருளை மேம்படுத்தி, காலப்போக்கில் எல்லா அப்ளிகேஷன்க்கும் சப்போர்ட் ஆகும்படி மாற்றுகிறார்கள், இதனால் அதன் செயல்திறன் மேலும் மேம்படும். இதை செய்ய Settings > System > Software Update என்பதற்குச் சென்று Check for Updates தேர்ந்தெடுப்பதன் மூலம் புதுப்பிப்புகள் இருக்கின்றனவா என்பதை சரிபார்க்கலாம். இதைச் சரியாக செய்துவந்தால், நம் போன் எல்லா வகையான அப்ளிகேஷன்களுக்கும் ஏற்றவாறு சரியான வேகத்தில் செயல்படும்.
முன்பே நிறுவப்பட்ட பயன்பாடுகளை முடக்கு (Disable Pre-installed Apps):
பல அப்ளிகேஷன்களை நாம் இன்ஸ்டால் செய்து அதில் சிலவற்றைத்தான் பயன்படுத்திக் கொண்டிருப்போம். மீதம் இருப்பதை கண்டுகொள்ளாமல் இருப்போம். இது காலப்போக்கில் உபயோகிக்காமல் இருந்தாலும், பின்னனியில்(Background ) பவரை எடுத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும். ஆகையால் அதை தடுக்க Settings > Apps > Installed Apps என்பதற்குச் சென்று தேவையற்ற ஆப்ஸை முடக்கிவிடுங்கள். அதாவது இப்போதைக்கு தேவையற்ற ஆப்ஸை அவ்வப்போது Disable பண்ணிவிடுங்கள்.
பயன்படுத்தப்படாத அனுமதிகளை ரத்து செய் (Revoke Unused Permissions):
ஆப்களுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதிகளை குறைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு:
இருப்பிட அணுகல்(Locations) ஐ தேவையற்ற ஆப்ஸ்களுக்கு disable செய்து வையுங்கள். இதனால் உங்கள் பேட்டரி தேவை குறைக்கப்படும். இதை செய்ய Settings > Privacy > permission manager இல் சென்று தேவையற்ற அனுமதிகளை disable செய்துகொள்ளலாம் அல்லது உங்கள் முகப்புத் திரையில் ஏதேனும் ஆப்ஸ் ஐகானை ரொம்ப நேரம் அழுத்திப் பிடித்தால், ஆப்ஸ் இன்ஃபோ( Apps info) என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
பின்னணி பயன்பாடுகளை அழிக்கவும்(Clear Background Apps):
தேவையில்லாமல் இயங்கும் பின்னணி பயன்பாடுகளை மூடிவிடுங்கள். காரணம் அந்த ஆப்பை தற்சமயம் நாம் பயன்படுத்தாவிட்டாலும், பின்னணியில் அது நம் நினைவகத்தைப் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கும். ஆகையால் சமீபத்திய ஆப்ஸ் மெனுவிலிருந்து நீங்கள் சில நேரத்துக்கு முன்னர் பயன்படுத்திய ஆப்பை (Recently used apps) ஸ்வைப் செய்து தள்ளி விடுங்கள்.
உங்கள் சாதனத்தை மேம்படுத்தவும்(Optimize Your Device):
தற்காலிக சேமிப்பை அடிக்கடி அழித்துக்கொள்ளுங்கள் (Regularly clear cache files).
பயன்படுத்தப்படாத கோப்புகள் மற்றும் ஆப்களின் பயன்பாடுகளை அகற்றிக்கொள்ளுங்கள்(Remove unused files and apps)
உங்கள் சாதனத்தை அவ்வப்போது மறுதொடக்கம் செய்யுங்கள்(Restart your device) .
சிறிய மெமரி கொண்ட ஆப்களை பயன்படுத்தப் பாருங்கள் .
நேரடி வால்பேப்பர்கள்(Live Wallpapers) மற்றும் நிறைய விட்ஜெட்கள் (Widgets)வைப்பதைத் தவிர்க்கலாம்.
புது போனை வாங்கிவிடுங்கள்:
நீங்கள் வைத்திருக்கும் போனில் மேலே குறிப்பிட்ட எந்த ஒரு வழிமுறையும் எடுபடவில்லை என்றால், அதாவது ரேம்(RAM ) முற்றிலுமாக செயல்படாவிட்டால் , உங்கள் தேவைக்கேற்ற அதிக ரேம் கொண்ட சாதனத்திற்கு மேம்படுத்த பாருங்கள் . காரணம் ஒரு போனில் இருக்கும் RAMதான், அந்த போன் இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றது.