ஆன்லைன் ஷாப்பிங்கில் நடக்கும் ஏமாற்று வேலையால் பதிக்கப்படும் மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயல், சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக புகழ்பெற்ற, பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. மேலும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு அதிகம் பகிரப்பட்டு, வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மூலமாக பலரும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவது தொடர் கதையாக மாறி இருக்கக்கூடிய நிலையில் இதற்கு அதிகம் டார்க் ஃபேண்டன் என்ற இணைய செயல்பாடு பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறைவான விலை, கவர்ச்சியான விளம்பரம், போலியான தகவல், மறைக்கப்பட்ட உண்மை, கவர்ச்சியான புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்படுகின்றன. அதை நம்பி ஆர்டர் செய்யும் நபர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் ஆகிறது.
இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்து பொருட்களை வாங்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட இணைய நிறுவனத்தினுடைய கமெண்ட் பாக்ஸை சென்று ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அந்த நிறுவனத்தினுடைய நம்பகத்தன்மை குறித்து இணையதளம் வழியாக அறிந்து கொள்வதும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை வழியாகும்.
மேலும் பிரபல நிறுவனங்களில் பெரும்பான்மையானவை உரிய அரசு அனுமதி பெற்று நடத்தப்படுபவை இவ்வாறான நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் முதல் நடவடிக்கையாக நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கவும், அந்நிறுவனம் பதில் அளிக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களை நாடி இழப்பீடு பெற முடியும்.