ஸ்பெஷல்

11 ஆதீன மடாதிபதிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

கல்கி

தமிழகத்திலுள்ள 11 ஆதீனங்களின் மடாதிபதிகள் இன்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் நடந்த இந்த சந்திப்பில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், மற்றும் கோவை சாந்தலிங்க அடிகளார் மடம், கவுமார மடாலயம், மயிலம் சிவஞான பாலய மடம், வேளாக்குறிச்சி மடம், சூரியனார் கோயில் சிவக்கிரக யோகிகள் மடம், அழகிய மணவாள ஜீயர் மடம், பெருங்குளம் செங்கோல் மடம், குன்றக்குடி துலாவூர் ஆதீனம் ஆகியவற்றின் மடாதிபதிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மே 5-ம் தேதி இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்  நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக 11 ஆதீனங்களின் மடாதிபதிகளை இன்று முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த சுவாமிகள் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் அனைத்து ஆதீனங்கள், சங்கராச்சார்யார், ஜீயர்களை உள்ள்டக்கிய தேய்வீகப் பேரவை செயல்படுத்தப் படவேண்டும் என் று அரசுக்கு கோரிக்கை வைத்தோம். மேலும், ஆதீனங்களுக்கான சட்டதிட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுகொண்டோம். திமுக அரசு ஆன்மீக அரசியலை மேற்கொண்டுள்ளது.

-இவ்வாறு தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார். 

முதல்வருடனான சந்திப்பைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்படி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரையும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

SCROLL FOR NEXT