மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தன் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ள நிலையில்,அம்மாநிலத்தின் அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் வகையில் எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள், போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவௌ தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே நேற்றிரவு தன் முதல்வர் பதவையை ராஜினாமா செய்தார். இதையடுத்து அம்மாநில அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அங்கு சட்டப்பேரவையில் இன்று நடக்கவிருந்த சிறப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் மகாராஷ்டிராவின் அடுத்த புதிய முதல்வராக பாஜக-வின் தேவேந்திர பட்னவிஸ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.