All Souls' Day 
ஸ்பெஷல்

கிறித்தவ சமயத்தில் இறந்தவர்கள் விண்ணகம் செல்ல உதவும் திருநாள்!

நவம்பர் 2: கல்லறைத் திருநாள்!

தேனி மு.சுப்பிரமணி

கிறித்தவ சபைகள் இறந்தோரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு விழாவாக, இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls' Day அல்லது The Commemoration of All the Faithful Departed) எனும் சிறப்பு நாளைக் கடைப்பிடிக்கின்றன. இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். கத்தோலிக்கத் திருச்சபை உட்பட பல கிறித்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் மாதம் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றன.

கிழக்குக் கிறித்தவ சபைகளின் கத்தோலிக்கத் திருச்சபை இந்நாளைச் சிறப்பாக நினைவு கூர்கின்றது. மேலும், ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டுள்ளன. நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூரப்படுகிறது. கிழக்கு மரபுவழி திருச்சபை இயேசு கல்லறையில் இருந்த நாளான சனிக்கிழமைகள் பலவற்றை வருடம் முழுதும் ஒதுக்கி இறந்த விசுவாசிகளை நினைவு கூர்கின்றது.

கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கையின்படி சாகும் வேளையில் நம்பிக்கையுடன் கடவுளோடு நட்புறவில் இறந்தும் விண்ணகம் செல்ல முழு தகுதியற்றவர்களாக இருப்பவர்கள், சிறிது காத்திருந்து தூய்மை பெற்று முதிர்ச்சியடைய கடவுளால் அளிக்கப்படும் வாய்ப்பு நிலையினை, தூய்மை பெறும் நிலை அல்லது உத்தரிப்புநிலை அல்லது உத்தரிக்கிற ஸ்தலம் என்கின்றனர். தூய்மை பெறும் நிலையைக் கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூல், ”தூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும்” என்று குறிப்பிடுகிறது.

இவர்கள் இந்த நிலையில் தங்கள் பாவங்களுக்கு உரிய வேதனைப்பட்டு, தூய்மை அடைவார்கள் எனவும், முற்றிலும் தூய்மை அடைந்த பிறகு, விண்ணகம் செல்வார்கள் எனவும் கத்தோலிக்கர் நம்புகின்றனர். இத்தகையோருக்கு கத்தோலிக்கத் திருச்சபையினர், இவ்வுலகில் இருந்து தங்களின் மன்றாட்டினால் உதவிட முடியும் என நம்புகின்றனர். நவம்பர் மாதம் முழுதும் இந்த நிலையில் இருப்போருக்காக கத்தோலிக்கர்கள் சிறப்பாக மன்றாடுகின்றனர். குறிப்பாக இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாளன்று அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று மன்றாடுவது வழக்கமாய் உள்ளது.

இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர். இவ்விழாவில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. கத்தோலிக்கத் திருச்சபையில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கல்லறைகளைச் சந்தித்து இறந்த விசுவாசிகளுக்காய் வேண்டுதல் புரிவோருக்கு முழுப்பலன் (Plenary indulgence) உண்டு என நம்பப்படுகின்றது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT