David Warner 
விளையாட்டு

இந்திய ரசிகர்களிடம் வார்னர் ஏன் மன்னிப்பு கேட்டார் தெரியுமா?

ஜெ.ராகவன்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தமது செயலுக்காக இந்திய ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார். குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டி இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஒருநாள் சர்வதேச போட்டியில் 6 வது முறையாக ஆஸ்திரேலியா கோப்பை வென்றுள்ளது.

கடந்த 19 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவை வென்றது. இந்த போட்டியின்போது டேவிட் வார்னர், “இந்தியர்களை மனதை நொறுக்கிவிட்டேன்” என்று கூறியிருந்தார். இதற்கு பலத்த கண்டணக்குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் டேவிட் வார்னர், எக்ஸ் தளம் மூலம் இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். “இந்திய ரசிகர்களின் மனதை நொறுக்கிவிட்டேன்” என்று கூறியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இறுதிப் போட்டி அமைதியான சூழலில் நடைபெற்றது. இந்திய அணியும் சிறப்பாகவே விளையாடியது. ரசிகர்களும் போட்டியை ஆர்வமுடன் பார்த்தனர். எனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டியில் டேவிட் வார்னர் 11 போட்டிகளில் பங்கேற்று 535 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் ரோகித் சர்மாவும் 500-க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இறுதிப்போட்டியில் வார்னர் 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.

இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனாலும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

விராட் கோலி, கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தனர். கேப்டன் ரோகித் 47 ரன்கள் எடுத்தார். முதலில் விளையாடி இந்திய அணி 240 ரன்களில் ஆட்டமிழந்தது.

பின்னர் ஆஸ்திரேலிய அணி ஆடியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கல் டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டை தொடக்க நிலையிலேயே வீழ்த்தினர். ஆனால், டிராவிஸ் ஹெட் சிறப்பாக நின்று ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT