பெண்களுக்கு 40 வயதைக் கடந்துவிட்டாலே ப்ரீ மெனோபாஸ் அறிகுறிகளும், ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படும். மாதவிடாய் சுழற்சி நிற்கும் காலகட்டம் தான் மெனோபாஸ். இந்த நாட்களில் பெண்கள் பல அசௌகரியத்தை உணர்வார்கள். இந்த மாதிரி நேரங்களில் என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சோயா நிறைந்த உணவுகள்:
சோயா நிறைந்த தாவர அடிப்படையிலான உணவைக் கடைப்பிடிக்கும் போது, ஹாட் ஃப்ளாசஸ்கள் 70 – 90 சதவீதம் குறைவதாக கண்டறிந்துள்ளனர். அதோடு ஹாட் ஃப்ளாசஸ் சமயத்தில் ஏறும் உடல் எடையும் கணிசமான அளவில் குறைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெஜிடேரியன் உணவுகள்:
மெனோபாஸ் சமயத்தில் அசைவ உணவுகள், கொழுப்பு சார்ந்த உணவுகளை அதிக அளவில் எடுப்பதை விடுத்து, தாவர அடிப்படையிலான உணவுகளை எடுத்துக் கொள்வது கூட ஹாட் ஃப்ளாசஸில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் உள்ள நல்ல கொழுப்பு, ஐசோஃப்ளேவோன் போன்ற ஊட்டச்சத்துக்கள் மெனோபாஸ் அறிகுறிகளை குறைக்கவும், ஹார்மோன்களை சுழற்சியை சரி செய்யவும் உதவும். அதேபோல், அதிக காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.
மெனோபாஸ் சமயத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது, ஆல்கஹால், காஃபைன், சர்க்கரை அதிக அளவில் எடுத்துக் கொள்வது போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் மெனோபாஸ் காலத்தை எவ்வித பிரச்சனையும் இன்றி எதிர்கொள்ளலாம்.