PCB Head Moshin 
விளையாட்டு

பாகிஸ்தான் அணி வீரர்கள் ஏஐ மூலம் தேர்ந்தெடுப்பு…!

பாரதி

வங்கதேசத்திற்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் பாகிஸ்தான் அணி வீரர்களின் டேட்டா காணாமல்போனதுதான் என்றும், விரைவில் ஏஐ மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பேசியுள்ளார்.

வங்கதேச அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது.

இதற்கு பலரும் பாகிஸ்தானின் முன்னணி வீரர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் டி20 உலகக்கோப்பை தொடரில் பாதியுடன் வெளியேறியதை கண்டுக்கொள்ளவே இல்லை.

மீண்டும் இப்போது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால், கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.

இந்தநிலையில், இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் மோஷின் நக்வி பேசியதாவது, “உலகக்கோப்பை தொடருக்கு பின்னரே, அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் தெரிந்தது, தேர்வுக்குழு ஆணையத்தில், பாகிஸ்தான் வீரர்கள் பற்றிய எந்த டேட்டாவும் இல்லையென்று. அந்த நேரத்தில்தான் புரிந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறது என்று. இனி நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் தொடரின்போதே அனைத்து பாகிஸ்தான் வீரர்களின் டேட்டாக்களையும் தயாரிக்கவுள்ளோம். அப்போது உண்மையான திறமைசாளிகள் வெளிப்படுவர். அதன் மூலமாக சுமார் 150 வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள். அதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு கொண்டு வரப்படுவார்கள்.

வீரர்களின் தேர்வில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டெக்னாலஜியின் பங்கு 80 சதவிகிதமாகும். மீதமுள்ள 20 சதவிகித பணிகளை தான் தேர்வு குழுவில் உள்ள உறுப்பினர்கள் செய்துள்ளனர். தேர்வுக் குழுவினர் பணியை யாராலும் செய்துவிட முடியாது. பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்களை நீக்கிவிட்டு, இன்னும் மோசமாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கிவிட கூடாது என்பதிலும் கவனமாக உள்ளோம்.” என்று பேசினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டிகளுக்கு கூட ஏஐ மூலமே வீரர்களை தேர்ந்தெடுக்கிறது. வீரர்களின் திறமை, அவர்கள் எந்த சமயத்தில் சொதப்புவார்கள், யாருக்கு எதிராக திறமையாக செயல்படுவார்கள் போன்றவற்றை எப்படி ஒரு ஏஐ அறிந்து செயல்படும் என்பதே ரசிகர்களின் முதல் கேள்வியாக உள்ளது.




Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT