Brain Games 
விளையாட்டு

உங்கள் அறிவை மேம்படுத்த இந்த விளையாட்டுகளை விளையாடுங்கள்!

A.N.ராகுல்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், நினைவாற்றல், கவனம் சார்ந்த சிக்கலைத் தீர்த்து நம் செயல்பாடுகளை மேம்படுத்த மூளை பயிற்சி சம்பந்தமான விளையாட்டுகள் பல உள்ளன. அப்படி உலகில் உள்ள சில சிறந்த டிஜிட்டல் ஆன்லைன் கேம்கள் மற்றும் அதன் தனித்துவமான அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

லுமோஸிட்டி (Lumosity):

Lumosity

லுமோசிட்டி என்பது மிகவும் பிரபலமான மூளை பயிற்சி விளையாட்டுகள் நிறைந்த தளமாகும். அறிவாற்றல் திறன்களை மேம்படுத்த நரம்பியல் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு விளையாட்டுகளை இது வழங்குகிறது. லுமோசிட்டியின் தனித்துவமான அம்சம் அதன் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி முறை(personalized training program), பயனரின் செயல்திறனுக்கு ஏற்றவாறு அவர்களின் முன்னேற்ற நிலையை குறித்த விரிவான கருத்துக்களை வழங்கும். இதனால் பயனர்களுக்கு குறிப்பிட்ட அறிவாற்றல் திறன்களை வளர்க்கவும், காலப்போக்கில் அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இது உதவுகிறது.

எலிவேட் (Elevate):

Elevate

அனைவரையும் ஈர்க்கும் கேம்கள் மூலம் Elevate கவனம் செலுத்துகிறது. வாசிப்புப் புரிதல்(reading comprehension), எழுதுதல் மற்றும் கணிதம் போன்ற நிஜ-உலகத் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் எலிவேட் தனித்து நிற்கிறது. பயனரின் இலக்குகள் மற்றும் செயல்திறனுக்கு ஏற்றவாறு தினசரி பயிற்சிகளை வழங்குகிறது.

பீக் (Peak):

Peak

நினைவகம், கவனம், ஒரு சிக்கலைத் எப்படி தீர்ப்பது மற்றும் மன சுறுசுறுப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் பயிற்சிகள் சார்ந்த கேம்களை பீக் வழங்குகிறது. அதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று "பயிற்சியாளர்"(Coach) அம்சமாகும். இது பயனரின் செயல்திறன் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி திட்டங்களையும்(personalized training plans) நுண்ணறிவுகளையும் வழங்குகிறது. பீக் முற்றிலும் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட விளையாட்டுகளை வழங்குகிறது.

CogniFit:

cognifit

CogniFit பல்வேறு வேடிக்கையான மற்றும் அனைவருக்கும் பொருந்துகின்ற விளையாட்டுகள் மூலம் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. பயிற்சியைத் தொடங்கும் முன் பயனர்கள் மேற்கொள்ளும் விரிவான அறிவாற்றல் மதிப்பீடு( comprehensive cognitive assessment) இதன் தனிச்சிறப்பு அம்சமாகும். இந்த மதிப்பீடால் அறிவாற்றல் சார்ந்த பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண முடியும். CogniFit பயனரின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் முடிவுகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்கும் ஆப்ஷன்களை வழங்குகிறது.

பிரைன் ஏஜ் (Brain Age):

நிண்டெண்டோ DS (Nintendo DS) கேமிங்கில் முதலில் வெளியிட பட்ட இது, பின் அடுத்தடுத்த இனையத்தளங்களில் வெளியிடபட்டது. இதில் மூளையை தூண்டும் புதிர்கள் போன்று வடிவமைக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பயனர்களுக்கு சவால்விடும் அனுபவத்தை தருகிறது. ‘பிரைன் ஏஜ்’ இன் தனித்துவமான அம்சம் "பயனரின் மூளை வயது" மதிப்பெண்ணைப் சுட்டி காட்டுவதாகும், இது பயனர்களுக்கு அவர்களின் உண்மையான வயதுடன் ஒப்பிடும்போது அவர்களின் அறிவாற்றல் ஆரோக்கியத்தைப் பற்றிய யோசனையை வழங்குகிறது. இந்த அணுகுமுறை பயனர்களை பல பயிற்சிகள் மேற்கொள்ள விட்டு, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த ஊக்குவிக்கிறது.

ஹாப்பி நியூரான் (Happy Neuron):

Happy Neuron

ஹாப்பி நியூரான் அதன் விளையாட்டுகளை ஐந்து முக்கியமான மூளைப் பகுதிகளாகப் பிரிக்கிறது. நினைவகம், கவனம், மொழி, நிர்வாக செயல்பாடுகள் மற்றும் காட்சி/வெளிசார் திறன்கள்(visual/spatial skills). இந்த தளத்தின் தனித்துவமான அம்சம் அறிவியல் அடிப்படையாகும். குறிப்பிட்ட அறிவாற்றல் செயல்பாடுகளைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளுடன், ஹேப்பி நியூரான் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களையும்(personalized training plans) வழங்கி, பயனரின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது.

வாழ்வியல் தத்துவத்தை உணர்த்தும் மகிஷாசுர வதம்!

மதுரை ஸ்பெஷல் பால்பன்னும், பட்டணம் பக்கோடாவும் செய்யலாம் வாங்க!

வாழ்வின் எதார்த்தம் கூறும் அயல்நாட்டு பழமொழிகள்..!

நவராத்திரி கொலு மண் பொம்மைகள் தாத்பரியம் தெரியுமா?

ருசியில் சிறந்த ரசகுல்லாவும், தால், கிழங்கு கச்சோரியும்!

SCROLL FOR NEXT