டெஸ்ட் கிரிக்கெட்டில், பல சகோதரர்கள் விளையாடி உள்ளனர். சேர்ந்தும், தனித் தனியாகவும் விளையாடி இருக்கிறார்கள். இரண்டு ஜோடி சகோதரர்களின் அசத்தல் ஆட்டங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஆஸ்திரேலியா:
இயன், கிரேக் சாப்பல் சகோதரர்கள். இருவரும் சேர்ந்து பல டெஸ்டுக்கள் விளையாடி இருந்தாலும் , தனித்துவம் பெற்ற டெஸ்டுக்களும் உண்டு.
இருவரும் சதங்கள் எடுத்த நிகழ்வு.
ஓவல் மைதானம். ஆகஸ்ட் 1972. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி.
இந்த இரு சகோதரர்களும், டெஸ்ட் சரித்திரத்தில் ஒரே இன்னிங்சில் சதங்கள் எடுத்த முதல் சகோதரர்கள் என்ற பெருமை பெற்றனர்.
இருவரின் சதங்கள் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 34 - 2 என்ற நிலையில் இயன் சாப்பலுடன் இணைந்தார், சகோதரர் கிரேக் சாப்பல். இருவரும் அட்டகாசமாக ஆடி பவுண்டரிகளை பறக்க விட்டனர். கிட்டதட்ட, இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் ஆடி அசத்தினர்.
இருவரும் சேர்ந்து 201 ரன்கள் சேர்த்தனர். முதலில் அவுட் ஆன கிரேக் சாப்பல் எடுத்த ரன்கள் 113 ( 226 பந்துகள். 17 x 4 ) கிரெய்க் கேட்ச் பிடித்தார். பவுலர் இல்லிங்ஒர்த். அணியின் ரன்கள் 61 கூடிய பிறகு, கேப்டன் இயன் சாப்பல் ஆர்ணால்ட் பந்தில் அவுட். கேட்ச் பிடித்தது ஜான் ஸ்னோ.
118 (267 பந்துகள். 20 x 4 )
இதே சாப்பல் சகோதரர்கள் ஏற்படுத்திய மற்றும் ஒரு மாறுபட்ட அபார சாதனை.
ஆம். ஒரே டெஸ்டில், இரு சகோதரர்களும் , இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்தனர்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக. வெல்லிங்க்டன் டெஸ்ட். மார்ச், 1974.
முதல் இன்னிங்ஸ்:
இயன் சாப்பல் 145 ( 268 பந்துகள். 17 x 4 & 1 x 6 )
கேட்ச் வாட்ஸ்வொர்த். போல்ட் வெப்ப்.
கிரேக் சாப்பல் 247*( 356 பந்துகள். 30 x 4 & 1 x 6 )
இரண்டாவது இன்னிங்ஸ்:
இயன் சாப்பல் 121 ( 218 பந்துகள். 13 x 4 & 1 x 6 )
கேட்ச் ஹாட்லீ . போல்ட் ஹவார்த்
கிரேக் சாப்பல் 133 ( 175 பந்துகள். 18 x 4 & )
கேட்ச் வாட்ஸ்ஒர்த். போல்ட் காலிங்கே.
முதல் இன்னிங்சில், இரு சகோதரர்களும் சேர்ந்து குவித்த ரன்கள் 264.
இரண்டாவது இன்னிங்க்சில் சாப்பல் சகோதரர்களின் பார்ட்னர்ஷிப் பெற்ற ரன்கள் 86.
கிரெக் சாப்பல், சகோதரர் இயன் சாப்பல் உடன் சேர்ந்து விளையாடுவதற்கு முன்னதாக, இயன் சாப்பலும், இயன் ரெட்ப்பாத்தும் சேர்ந்து நெடு நேரம் விளையாடினார்கள். சதம் அடிப்பதை தவற விட்ட இயன் ரெட்ப்பாத் எடுத்த ரன்கள் 93.
இந்த மேட்ச் டிராவில் முடிந்தது.
வேறு இரு சகோதரர்களின் சதங்கள் குறித்து காண்போம்.
இந்த டெஸ்டில் மொத்தம் 6 சதங்கள் ( இரண்டு இரட்டை சதங்கள் உட்பட)
நாக்பூர் டெஸ்ட், நவம்பர், 2000
இந்திய மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே.
ஆண்டி ப்ளவர், கிராண்ட் ப்ளவர் சகோதரர்கள்.
முதல் இன்னிங்சில் இளைய சகோதரர் கிராண்ட் ப்ளவர் சதம் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில், மூத்த சகோதரர் இரட்டை சதம் எடுத்து அசத்தினார்.
முதல் இன்னிங்ஸ்:
கிராண்ட் ப்ளவர் 106* ( 196 பந்துகள். 12 x 4. & 4 x 6 )
ஆண்டி ப்ளவர் 55 ( 92 பந்துகள். 4 x 4 & 2 x 6 )
இரண்டாவது இன்னிங்ஸ்:
ஆண்டி ப்ளவர் 232* ( 444 பந்துகள். 30 x 4 & 2 x 6 )
ஜிம்பாப்வே அணியின் இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணியில் விக்கெட் கீப்பர் விஜய் தாஹியாவை தவிர மற்ற 10 வீரர்களும் பவுலிங் செய்தனர்.
இந்த டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தது. இந்த டெஸ்டில் ஆண்டி ப்ளவர் ஆட்ட நாயகன்.
ஆண்டி, கிராண்ட் ப்ளவர் சகோதரர்கள் ஜிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு தங்களது மகத்தான பங்களிப்புகளை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.