ஆரோக்கியம்

மூலிகைகளின் ராணி துளசி!

ஜெ.ராகவன்

டல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் பல்வேறு பொருட்களில் துளிசியும் ஒன்று. ஆயுர்வேதத்தில் துளசி முக்கிய பங்காற்றி வருகிறது. இது, ‘மூலிகைகளின் ராணி’ என்றும் அழைக்கப்படுகிறது.

துளசி உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. இதனால்தான் கோயில்களில் துளசி தீர்த்தம் தரப்படுகிறது. துளசியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளன. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அமிலங்களைக் கரைக்க துளசி உதவுகிறது. உடலில் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

துளசிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. துளசி கலந்த நீரை குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வாயு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. துளசி தண்ணீரை ஒரு பாட்டிலில் வைத்து அடிக்கடி குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் வெளியேறிவிடும். மன அழுத்தத்தைப் போக்கும் மூலிகை மருந்து துளசி. மன அழுத்தம் குறைந்தாலே பதற்றமும் குறைந்து நன்கு சுவாசிக்க முடியும். சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு துளசிதான். துளசிச் சாறை குடித்துவந்தால் சுவாசப் பிரச்னை குறைந்து நன்கு சுவாசிக்க முடியும்.

துளசியில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய்வழி தொற்றுகளை எதிர்த்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தினமும் துளசி கலந்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றைத்தை போக்கி, ஈறுகளை பலப்படுத்தலாம்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT