Benefits of eating ladys finger for diabetics! 
ஆரோக்கியம்

சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

கிரி கணபதி

ர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் தமது உடலில் உள்ள சர்க்கரையை நிர்வகிப்பது அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய அம்சமாகும். இதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கையாக அதை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மக்களால் உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளப்படும் வெண்டைக்காய், சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவுகிறது. சில ஆய்வுகளே இதை உறுதிப்படுத்தியுள்ளன. அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது அதில் நிறைந்துள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆகும். இது செரிமான மண்டலம் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்கி நிலையான இரத்த அளவுக்குக் காரணமாகிறது.

வெண்டைக்காய் வைட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய காய்கறி ஆகும். அதன் ஊட்டச்சத்து அடர்த்தி அதை நம் உணவில் தவிர்க்க முடியாத உணவாக மாற்றுகிறது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. மேலும், இதன் ஊட்டச்சத்துக்கள் இன்சுலின் உணர்திறன் மீது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நீரிழிவை கட்டுப்படுத்துகிறது.

வெண்டைக்காய் சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கிறது. அதில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்கள் மற்றும் வைட்டமின்களே இதற்குக் காரணம். இதனால் ஆக்சிஜனேற்ற அழுத்தம் கணிக்கப்படுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்துவதில் வெண்டைக்காய் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும், அதை எப்படி சமைக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளுடன் வெண்டைக்காயை சேர்த்து சமைப்பது எதிர்மறையான விளைவுகளைத் தரலாம். எனவே, வெண்டைக்காயை வேக வைத்து கொடுப்பது அல்லது வதைக்கி சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமான சமையல் முறையை தேர்ந்தெடுத்தால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மேம்படும். அதேசமயம், இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

SCROLL FOR NEXT