exercise 
ஆரோக்கியம்

தினசரி எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது தெரியுமா? 

கிரி கணபதி

ஆரோக்கியமே அனைத்திற்கும் அடிப்படை” என்ற பழமொழி போல, நம் உடல் ஆரோக்கியம் நம் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆரோக்கியத்தைப் பேணுவதில் உடற்பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு. தினசரி உடற்பயிற்சி என்பது வெறும் உடல் எடையை குறைப்பது மட்டுமல்ல, மன அமைதி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது போன்ற பல நன்மைகளைத் தரும் ஒரு முக்கியமான முதலீடு. 

உடற்பயிற்சியின் அவசியம்: தற்கால வாழ்க்கைமுறை நம்மை குறைந்த உடல் செயல்பாட்டிற்குள் தள்ளிவிடுகிறது. இதன் விளைவாக பல நோய்கள் உண்டாக்கினன. உடற்பயிற்சி இதய நோய், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், எலும்புகள் வலுவடைந்து தசைகள் வளர்ச்சி பெற்று, உடல் இன்னும் சீராக செயல்பட உதவுகிறது. 

தினசரி எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? 

உடற்பயிற்சி செய்ய வேண்டிய நேரம் ஒருவரின் வயது உடல்நிலை, உடற்பயிற்சியின் தீவிரம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, உலக சுகாதார அமைப்பு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிர உடற்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறது. இதை தினசரி 30 நிமிடங்கள் என்ற அளவில் சராசரியாகப் பிரிக்கலாம். 

உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்: 

உடற்பயிற்சி உடலில் உள்ள கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது இதயத்தை வலுப்படுத்தி, இதய நோய், உயரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. 

உடற்பயிற்சி எண்டார்ஃபின் எனப்படும் மகிழ்ச்சி கொடுக்கும் ரசாயனத்தை வெளியிட்டு மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. 

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் தொற்றுக்களில் இருந்து நாம் பாதுகாப்புடன் இருக்கலாம். உடற்பயிற்சி நல்ல தூக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது. 

எலும்புகளின் ஆரோக்கியம் வலுப்படவும், எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கவும், நாம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்வதால் நம் தன்னம்பிக்கை அதிகரித்து வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ள முடியும். 

தினசரி உடற்பயிற்சி என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். இது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறது. எனவே இன்று முதல் உடற்பயிற்சியை ஒரு பழக்கமாக மாற்ற முயலுங்கள். 

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

SCROLL FOR NEXT