Do you know the benefits of eating papaya seeds? 
ஆரோக்கியம்

பப்பாளி விதைகளை உண்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ப்பாளி பழம் உண்பதற்கு சுவையாக இருப்பதுடன், இது எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் உடலுக்கும் மிகுந்த ஆரோக்கியம் தருகிறது. ஆனால், பப்பாளி பழத்தில் தூக்கி எறியப்படும் அதன் விதைகளில் கூட ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

100 கிராம் உலர்ந்த பப்பாளி விதைகளில் சுமார் 558 கலோரி நிறைந்திருக்கிறது. அதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.

பப்பாளி விதைகளை உண்பதால் உண்டாகும் நன்மைகள்:

1. பப்பாளி விதையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடலை ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும், இதில் உள்ள கார்பன் குடலில் உள்ள பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளைக் கொன்று செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.

2. உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் அகற்றப்படுவதால் கொழுப்பை நம் உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. அதனால் உடல் பருமனும் தடுக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.

3. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைப்பதனால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை உடல் பராமரிக்க உதவுகிறது.

4. இதில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோயிலிருந்து தடுக்கிறது. புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது.

5. சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்வதை ஊக்குவிக்கின்றன. மேலும், இருதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. கீழ்வாதம், மூட்டு வலி போன்றவற்றை குறைக்கிறது.

6. பப்பாளி விதைகள் நமது சருமத்தை பளபளப்பாக வைப்பதுடன் முகத்தில் கோடுகள் சுருக்கங்கள் உருவாவதை தடுத்து, இளமை தோற்றத்தைத் தருகிறது.

7. ஹார்மோன் உற்பத்தியை உடல் சீராக சுரப்பதில் உதவுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் வலியை குறைக்கிறது. கல்லீரல் மற்றும் ஈரல் அழற்சியில் இருந்து தடுக்கிறது.

பப்பாளி விதைகளை உண்ணும் விதம்:

விதைகளை சாலட்டுகள், ஸ்மூத்தீஸ் போன்றவற்றில் சேர்க்கலாம். மேலும், இவை கசப்பான சுவை கொண்டுள்ளதால் பப்பாளி பழத் துண்டுகளுடன் சாப்பிடலாம்.

உலர வைத்து பொடியாக்கி பொரியல் மற்றும் கூட்டில் கலந்து உண்ணலாம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உண்ணுவது நல்லதல்ல.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT