Do you know the dangers of eating too much meal maker? https://blog.standardcoldpressedoil.com
ஆரோக்கியம்

மீல் மேக்கர் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

மீல் மேக்கர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும். இதில் புரத சத்து அதிகமாக இருப்பதால் இறைச்சிக்கு சமமாக கருதப்படுகிறது. ஆனால், இதை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு விளையும் தீமைகள் அதிகம்.

மீல் மேக்கர் என்பது கடினமான நிலையில் இருக்கும் வெஜிடேரியன் புரதம். சோயா பீன்ஸில் இருந்து சோயா பால், சோயா புரதம், சோயா எண்ணெய் கிடைக்கிறது. சோயா எண்ணெய் தயாரிக்கும்போது, அதனை பிழிந்து எடுத்த பிறகு கிடைக்கும் சக்கைதான் மீல் மேக்கர். சைவ பிரியாணி, மீல் மேக்கர் குருமா, மீல் மேக்கர் வறுவல் போன்று பலவிதமாக சமைக்கப்படுகிறது.

சோயாவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மீல் மேக்கரிலும் கிடைக்கும். மீல் மேக்கரில் அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. இதில் கொழுப்பு சத்தும் கார்போஹைட்ரேட்டும் குறைவாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து இதயத்துக்கும் எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது.

கல்யாண விருந்துகளில் வெஜ் பிரியாணிகளில் பீன்ஸ், கேரட், பட்டாணி கூடவே சோயாவும் கண்டிப்பாக இருக்கும். புரதச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு ஒரு நல்ல மருந்து என்று சொல்லலாம். சோயாவை அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு சேர்த்து வரலாம்.

இவற்றை அதிகமாக உண்பது நல்லதல்ல. மாதத்திற்கு நான்கு ஐந்து முறை எடுத்துக் கொண்டாலே போதும். அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் தைராய்டு சுரப்பியில் பிரச்னையையும் ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை, பல ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் அவற்றை தவிர்க்கலாம்.

இது செரிமானத்தை தடுப்பதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது. மேலும், இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் என்கிற வேதிப்பொருள் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் பிரச்னையையும் கொண்டு வருகிறது. சிலருக்கு சரும சம்பந்தமான வியாதிகள் வரக்கூடும். தொண்டை சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். தாய்ப்பால் தரும் தாய்மார்கள் அவசியம் இதைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT