Easily digestible foods 
ஆரோக்கியம்

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ற்போதைய காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம், உடல் சோர்வு, வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை போன்ற காரணங்களால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நமக்கு, நம் உடல் நலத்தை, குறிப்பாக நம் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் காப்பது தலையாய கடமையாகும். அதற்கு நாம், ஜீரணிக்க எளிதாகவும் அதேநேரம் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது அவசியம். அதற்கு பொருத்தமான ஒன்பது வகை உணவுகள் எவை என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

யுனைடட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் (USDA) அறிவித்துள்ளபடி, உடனடி சக்தி தரக்கூடிய கார்போஹைட்ரேட் மற்றும் மாவுச்சத்து அடங்கிய ஒயிட் ரைஸ் சுலபமாக ஜீரணமாகக்கூடிய ஓர் உணவாகும். இதில் வைட்டமின்களும் மினரல்களும் அதிகளவு நிறைந்துள்ளன. விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்ற உணவு இது.

பழுத்த வாழைப் பழங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும், எடைக் குறைப்பிற்கும் உதவும். மலச்சிக்கலை தவிர்க்கவும், வயிற்றுப்போக்கு நோயை குணப்படுத்தவும் செய்யும் வாழைப்பழம். இப்பழத்தை சமைத்து உண்ணும்போது ஜீரணம் எளிதாகும்; ஆரோக்கிய நன்மைகளும் கூடும் என்பது நிபுணர்கள் கருத்து.

ஸ்வீட் பொட்டடோவில் டயடரி ஃபைபர் அதிகம். இது ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும், சிறப்பான செரிமானத்துக்கும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவும். ஸ்வீட் பொட்டடோவில் உள்ள அதிகளவு பைட்டோஸ்டெரால் (Phytosterol) ஜீரண மண்டல உறுப்புகளைப் பாதுகாக்கும் குணம் கொண்டது.

ஆப்பிள் சாஸில் உள்ள வைட்டமின் C ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லது. ஆப்பிள் சாஸ் தக்க வைத்துள்ள சில ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கேன்சர் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன; ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி நுரையீரல் சிதைவைத் தடுக்கின்றன; இதனால் ஆஸ்ததுமா நோய் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.

யோகர்ட் குறைந்த நார்ச்சத்து கொண்ட புரோபயோட்டிக் உணவு. இதில் பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் A, B2, B12 ஆகிய சத்துக்களும் உள்ளன. யோகர்டில் அதிக பயோலாஜிகல் மதிப்புடைய புரோட்டீன் மற்றும் கொழுப்பு அமிலங்களும் உள்ளன.

வாட்டர் மெலன், மஸ்க் மெலன், கேன்டலோப் ஆகிய பழங்களில் அதிகளவு நீர்ச்சத்தும், பீட்டா கரோடீன் போன்ற ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை உடல் சிறப்பாக இயங்கவும், சிறப்பான செரிமானத்துக்கும் உதவுகின்றன.

பட்டர் நட், அகார்ன் மற்றும் ஸ்பகெட்டி போன்ற ஸ்குவாஷ்கள் அதிகளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. இவை செரிமானத்தை சிறப்பாக்கி, இரத்த சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ரால் அளவையும் சமநிலையில் வைக்க உதவி புரிகின்றன.

முட்டைகளை அவித்தோ, பொரித்தோ, துருவிய வடிவிலோ எப்படி சமைத்து உட்கொண்டாலும் அவை சுலபமாக செரிமானமாகக் கூடியவை. முட்டை ஜீரண மண்டல உறுப்புகள், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஓட்ஸில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகியவை ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ரால் அளவையும் சமநிலையில் வைக்கவும் உதவி புரிகின்றன.

மேலே கூறிய உணவுகளை உட்கொண்டு இந்த சம்மரில் உடலை இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துப் பராமரிப்போம்.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT