ஆரோக்கியம்

உங்களுக்கு மூக்கடைப்பு, சளி தொல்லையா? அப்போ இந்த 9 டிப்ஸ் உங்களுக்குதான்!

ஜெயகாந்தி மகாதேவன்

ழைக்காலம் தொடங்கிவிட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று மூக்கடைப்பு மற்றும் சளி தொல்லை. சனி தொல்லை தீர்ந்தாலும் இந்த சளி தொல்லை தீரவே தீராது என்பது மக்களை வாட்டி எடுத்து விடுபவை மழைக்கால தொற்றுக்கள். மழை மற்றும் குளிர்காலங்களில் அடிக்கடி ஏற்படும் இந்த மூக்கடைப்பு மற்றும் சளி தொல்லை உடனடியாக நீங்க இதோ உங்களுக்கான ஒன்பது சூப்பரான டிப்ஸ்..!

நம் மூக்கு மற்றும் மூச்சுப் பாதையில், தொற்றுக்களால் உண்டாகும் அடைப்பு, அழற்சி மற்றும் சளி போன்ற நோய்கள் குணமாக, உண்ணும் உணவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்பது பொருள்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

  1. பச்சை மஞ்சளுடன் சிறிதளவு மிளகு இடித்து பாலுடன் குடித்துவந்தால் மூச்சுப் பாதையில் உருவான அடைப்பு நீங்கும்.

  2. பூண்டில் உள்ள அல்லிசின் என்ற பொருள் ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து, நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும். இதனால் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடும் குணம். சளி தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் 5 பல் பூண்டை நெய்யில் சிறிதளவு வதக்கி சாப்பிட்டால் சளி தொல்லை நீங்கும்.

  3. ஆன்டி இன்ஃபிளமேட்ரி குணமுடைய இஞ்சி சைனஸ் பிரச்சனையை தீர்க்க வல்லது. இஞ்சியில் டீ போட்டு அருந்துவதும், உணவுகளில் சேர்த்து சமைத்து உண்பதும் சளி மற்றும் மூக்கடைப்பு விரைவில் சரியாக வழிவகுக்கும்.

  4. சிவப்பு மிளகாய் சேர்த்து சமைத்த ஸ்பைசி உணவுகளை உண்ணுவதால் மூக்குப் பாதையிலுள்ள சளி நீங்கி, அடைப்பிற்கு தற்காலிக தீர்வு கிடைக்கும்.

  5. வைட்டமின்-C அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு, லெமன், கிரேப் போன்ற பழங்கள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. அதன் மூலம் தொந்தரவு தரும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி குணமடையச் செய்ய முடிகிறது.

  6. பைனாப்பிளிலுள்ள ப்ரோமெலெய்ன் என்ற என்ஸைமானது, மூக்கில் சளி சேர்வதைக் குறைத்து,சைனசையும் குணமாக்குகிறது.

  7. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலத் தன்மையானது சளியைக் கரைக்கவும், சைனசை குணமாக்கவும் கூடியது. இந்த வினிகரில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்து உபயோகிப்பது அவசியம்.

  8. கிழங்கான் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆன்டி இன்ஃபிளமேட்ரி குணமுடையது. அது மூக்கின் வீக்கத்தை குறைத்து குணமடைய உதவுகிறது.

  9. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த க்ரீன் டீ குடிப்பதால் நோயெதிர்ப்புச் சக்தி வலுவாகிறது. அதனால் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி குணமடைவது எளிதாகிறது.

மேற்கண்ட உணவு முறைகளைப் பின்பற்றி சளித் தொந்தரவிலிருந்து விடுபடுவோம்... சந்தோசமா வாழ்வோம்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT