Multiple Sclerosis என்பது மூளை மற்றும் பார்வை நரம்பு மண்டலங்கள் உட்பட மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த நோய் பெண்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த சில தகவல்களைப் பார்ப்போம்.
மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள மெய்லின் என்றழைக்கப்படும் நரம்புகளை சுற்றியுள்ள பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தும் நிலைதான் Multiple Sclerosis. இதனால், தசை பலவீனம், பார்வை மாற்றங்கள், உணர்வின்மை மற்றும் நினைவக சிக்கல்கள் ஆகியவை ஏற்படும். இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.
இந்த நோய் ஏற்படுவதற்கான துல்லியமான காரணம் தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், Epstein-Barr virus (EBV) அல்லது Mononucleos போன்ற வைரஸ்களின் வெளிப்பாடு மல்டிபிள் ஸ்களீரோசிஸை உண்டு செய்யலாம் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட மரபணு அம்சங்களை கொண்டவர்களிடம் கூட இந்த மல்டிபிள் ஸ்களீரோசிஸ் உருவாகலாம் என்று நம்புகிறார்கள்.
வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு எளிதாக இந்த Multiple சுசில்ரோசிஸ்நோய் ஏற்படும். இது வைட்டமின் டி குறைப்பாட்டை ஏற்படுத்தலாம். நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படுவதை பாதிக்கலாம்.
பொதுவாக இந்த Multiple Sclerosis, 20 முதல் 40 வயதுக்குள்ளவர்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பிடிப்பவர்களுக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்த நோய் அவர்களுக்கு அதிகளவு ஆபத்தையும் ஏற்படுத்தும்.
தசை பலவீனம், உணர்வின்மை மற்றும் பார்வை நிறமாற்றம் ஆகியவை இதன் அறிகுறிகள். சோர்வு, மயக்கமான உணர்வு, அறிவாற்றல் செயல்பாட்டில் சிரமம், மனநிலை மாற்றம், தசை விறைப்பு மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை இவற்றின் பொதுவான அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும், நோயின் தாக்கத்திற்கும் ஏற்றவாரு மாறும். ஆகையால், அறிகுறிகள் வைத்து மட்டும் சரியாக சொல்லிவிட முடியாது.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். இந்த நோய் ஊசி மற்றும் மருந்துகள் மூலமாகவே சரிசெய்யப்படும்.