கல்கி டெஸ்க்
ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை 1994ல் வென்ற பின், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் இதுவரை 48 படங்களில் நடித்து, இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக திகழ்கிறார்.
நவம்பர் 1, 2023ல் 50 வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ள இந்த உலக அழகி நடித்த டாப் 10 படங்கள் இதோ:
இருவர்: 1997ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் தோன்றி தனது திரை உலக வாழ்க்கையை தொடங்கினார் ஐஸ்வர்யா.
ஜீன்ஸ் - 1998ல் இயக்குனர் சங்கர் எடுத்த இந்த படத்தில் உலக அதிசயமாகப் பார்க்கப்பட்டார் ஐஸ்வர்யா.
தாளம் - ஹிந்தியில் வந்த இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு 1999ல் வெளியானது. இசைப்புயல் இசை அமைத்த இந்தப் படத்தின் பாடல்களும் ஐஸ்வர்யாவின் நடனமும் அதிரி புதிரி ஹிட்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - ராஜிவ் மேனன் இயக்கத்தில் 2000த்தில் வெளியான இந்தப் படத்தில் தனது நடிப்பு திறமையால் அசத்தினார் ஐஸ்வர்யா.
தேவதாஸ் - ஹிந்தி சூப்பர்ஸ்டார் ஷாருக் கானுடைய தேவதாசின் பார்வதியாக தோன்றினார் ஐஸ்வர்யா. 2002ன் மிகப்பெரிய வெற்றிப்படமாக இது அமைந்தது.
குரு - மறுபடியும் மணிரத்தினம் இயக்கத்தில் 2007ல் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக தோன்றினார். இந்த படம் வெளிவந்து சில மாதங்களில் நிஜ வாழ்க்கையிலும் ஐஸ்வர்யா - அபிஷேக் ஜோடி சேர்ந்தனர்.
ஜோதா அக்பர் - 2008ல் வெளியான பிரம்மாண்ட சரித்திர படம் இது (ஹிந்தி). ஹ்ரித்திக் ரோஷனுடன் ஜோதா பாய் என்ற பாத்திரத்தில் நடித்தது இவருக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.
ராவணன் - மணிரத்தினம் கூட்டணியில் ஐஸ்வர்யாவுக்கு மற்றுமொரு மகுடம் 2010ல். தமிழ், ஹிந்தி இரு மொழிகளிலும் வெளியான படம், இதில் சீயான் விக்ரம் உடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருந்தார்.
எந்திரன் - சூப்பர் ஸ்டாருடன் ஐஸ்வர்யா நடித்த வெற்றிப் படம் இது. சங்கர் இயக்கத்தில் 2010ல் வெளியானது. இயந்திரமும் காதலிக்கும் பேரழகியாக நடிக்க இவரைத் தவிர வேறுயார் பொருத்தமாக முடியும்?
பொன்னியின் செல்வன் - 2022, 2023ல் இரண்டு பாகமாக, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த காவியம் இது. கல்கியின் கற்பனை படைப்பான நந்தினி கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தார் ஐஸ்வர்யா.
கல்கி குழுமம் சார்பில் 'உலக அழகி' ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.