வழிகாட்டியாய் நின்ற குருவின் நிழலில் சென்ற சிஷ்யனுக்கு புகழஞ்சலி!

ஆதிரை வேணுகோபால்

அன்பெனும் நூல் கோர்த்த உறவாய் ஆசான் காட்டிய நல்வழியில் இன்று சிஷ்யன். இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பாக்யராஜ். வழிகாட்டியாய் நின்ற குருவின் நிழலில் சென்றுவிட்டார்.

pugazh anjali for director bhagyaraj | AI image

1/12. 1977ல் '16 வயதினிலே' படத்தில் பாரதிராஜாவிற்கு உதவியாளராக தமது திரை வாழ்க்கையைத் துவக்கியவர். 

director bhagyaraj and bharathiraja | AI image

2/12. 'புதிய வார்ப்புகளில்' கதாநாயகனாக தனது புதிய பயணத்தை ஆரம்பித்தார். படத்தின் வசனம் அவரே.

puthiya vaarpugal | AI image

3/12. 79 இல் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படம் மூலம் இயக்குனரானார். வறுமை, பசி, காதல், மானம் அனைத்தையும் ஒருங்கிணைந்த ஒரு திரைப்படம்  இது. 

suvar ilatha sithiram | AI image

4/12. 'விடியும் வரை காத்திரு' சொத்துக்காக சத்தியக்கலாவை திருமணம் செய்து கொண்டு பிறகு அவரை கொலை செய்ய முயற்சி செய்யும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடி இருப்பார். 

vidiyum varai kathiru | AI image

5/12. 'ஒரு கை ஓசை' காமெடியுடன் வாய் பேச முடியாத ஒருவரை மன உறவுகளை திரைக்கதையில் மிக அழகாக பிரதிபலித்திருப்பார்.

oru kai osai | AI image

6/12. 'இன்று போய் நாளை வா' ரோட் சைடு ரோமியோக்கள் பற்றிய ஒரு ஜாலியான படம்.  படம் முழுக்க நகைச்சுவை உணர்வு இறுதி வரை இழையோடும்.

indru poi naalai vaa | AI image

7/12. 'முந்தானை முடிச்சு' படத்தில் திரைக்கதைக்கு ஏற்ற பாத்திரங்களை தேர்ந்தெடுத்து திறமையாக பயன்படுத்தி பாசாங்குகள் அற்ற எதார்த்தமான இயக்குனர் என்று நிரூபித்து இருப்பார்.

mundhanai mudichu | AI image

8/12. 1977 ல் முதலமைச்சர் எம்ஜிஆர் சில காட்சிகளில் நடித்து நின்று போன படம் தான் 'அண்ணா நீ என் தெய்வம்' இக்காட்சிகளின் மீது புதியதாக ஒரு திரைக்கதை அமைத்து தானும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்யராஜ் உருவாக்கிய படம் தான் அவசர போலீஸ் 100 வெற்றி படம் வெள்ளி விழா படம்.

avasara police 100 | AI image

9/12. 1981 இல் 'மௌன கீதங்கள்' படத்தில் தனது முன்னாள் மனைவியுடன் மீண்டும் இணைய முயற்சிக்கும் ஒரு மனிதனை சுற்றிய கதையை கணவன் மனைவிக்கு இடையிலான நெருக்கத்தை வெளிகாட்டி திரைக்கதை அமைத்திருப்பார்.

mouna geetham | AI image

10/12. 'ஆராரோ ஆரிரரோ' கதை திரைக்கதையுடன் இசையைச் சேர்த்து அமைத்து தான் ஒரு ஆல் இன் ஆல் என நிரூபித்து இருப்பார்.

aararo aariraro | AI Image

11/12. முழுக்க முழுக்க தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி தமது திறமைகள் திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பியே திரைப்படங்கள் இயக்கி வெற்றி கண்ட மாமனிதர்.

director bhagyaraj | AI image

12/12. இப்படி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காண்பித்து திரைக்கதை அமைத்து தான் ஒரு சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என பலராலும் போற்றப்பட்ட திரு. பாக்யராஜ்  அவரின் திரைப்படங்கள் வாயிலாக நம்முள் தலைமுறைகள் கடந்தும்  வாழ்ந்து கொண்டிருப்பார்.

director bhagyaraj | AI image
OTT release movies and series | AI Image
இனி தியேட்டருக்கு போகவே மாட்டீங்க.. இந்த வாரம் OTT-ல் இத்தனை மாஸ் படங்களா?