என்னது இத்தனை படங்களா?! அக்டோபர் 23 தியேட்டர்களை அதிரவைக்கும் மாஸ் தமிழ் படங்கள்!

சென்னிமலை சி.பி. செந்தில்குமார்

Tamil movie

1. ரிலீஸ் பின்னணி: அடுத்த மாதம் தீபாவளிக்கு பெரிய படங்கள் வெளியாவதால், இந்த மாதம் நான்கு லே பட்ஜெட் தமிழ்ப் படங்கள் களமிறங்குகின்றன.

Tamil movie | Gemini image

2. ​ஹைகூ - படக்குழு: முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, யுவராஜ் இயக்கத்தில், சித்து குமார் இசையில் உருவாகியுள்ள படம் 'ஹைகூ' (2026).

Tamil movie

3. ​ஹைகூ - கதைக்களம்: மகளிர் கல்லூரியில் பயிலும் ஒரே ஆணான நாயகனுக்கு இரண்டு வெவ்வேறு பெண்களுடன் ஏற்படும் காதலும், அதைச் சுற்றியுள்ள காமெடி கலாட்டாவும் இப்படத்தின் கதையாகும்.

Tamil movie

4. நோவா - படக்குழு: ரைசா வில்சன், துருவா நேனி, அத்விதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து, மிலோ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நோவா'.

Tamil movie

5. நோவா - கதைக்களம்: மலைப்பிரதேசத்தில் பேய்ப்படம் எடுக்கச் சென்று மாட்டிக்கொள்ளும் படக்குழு, 1969-ம் ஆண்டு கால கட்டத்திலிருந்து கிடைக்கும் உதவியைக் கொண்டு எப்படித் தப்பிக்கிறது என்பதைச் சொல்லும் சயின்ஸ் பிக்சன் ஹாரர் திரில்லர் படம்.

Tamil movie

6. அசுரகுலம் - விவரங்கள்: விக்னேஷ் மேனன் இயக்கத்தில், சபரீஷ், வித்யா பிரதீப், தம்பி ராமையா, லால் மற்றும் ஜான் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் படமாகும்.

Tamil movie

7. அசுரகுலம் டீசர்: இப்படத்தின் டிரெய்லரோ அல்லது டீசரோ இதுவரை வெளியாகவில்லை.

Tamil movie

8. பிக்காசோ - படக்குழு: அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன் இயக்கத்தில், அபிஷன் நாயகனாக நடிக்க, கன்னட நடிகர் சிவராஜ்குமார் தந்தையாகவும், யோக லட்சுமி நாயகியாகவும் நடிக்கும் ரொமாண்டிக் டிராமா படம்.

Tamil movie

9. பிக்காசோ டீசர்: அசுரகுலத்தைப் போலவே இப்படத்தின் டிரெய்லரும் டீசரும் வெளியாகவில்லை.

Tamil movie

10. வெவ்வேறு ஜானர்கள்: இந்த மாதம் வெளியாகும் இந்த நான்கு படங்களும் (ஹைகூ, நோவா, அசுரகுலம், பிக்காசோ) ரொமான்ஸ், சயின்ஸ் பிக்சன் ஹாரர் மற்றும் ஆக்சன் என வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டுள்ளன.

Tamil movie | Gemini image
Jailer 2
கூலி சாதனையை முறியடித்ததா ஜெயிலர் 2? இரண்டு நாள் வசூல் நிலவரம்!