எஸ்.மாரிமுத்து
தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த் படங்களில் எழுச்சி வசனங்கள் நிறைய பேசி மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார். அதே மாதிரி சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தும் பாராட்டு பெற்றவர். ஏழைகளுக்கும், சினிமாவில் உள்ளவர்களுக்கும் பசியாற உணவு அளித்தவர். அவர் நடித்த படங்களில் எழுச்சி மிக்க வசனங்கள் இன்றும் ஒலிக்கிறது.
படம் - சின்ன கவுண்டர்:
"சாமி எல்லா இடத்துலேயும் இருந்தாலும் கும்பிடறதுக்குன்னு ஒரு இடம் வேணும், அதுக்கு பேருதான் கோயில். அதை தூக்கி விளையாடறதுக்கு மனுஷனுக்கு சக்தி கிடையாது. அதுல போயி நாம தகராறும் பண்ணக் கூடாது."
படம் - வல்லரசு:
காந்தி பிறந்த இந்த மண்ணுல தான் சுபாஷ் சந்திர போஸும் பிறந்தாரு. நான் காந்தியா இருக்குறதும், சுபாஷ் சந்திர போஸாக மாறுறதும் உன் கையில தான் இருக்கு!
படம் - பெரிய மருது
நான் வீரனா இல்லையானு இந்த நாட்டு மக்களுக்குத் தெரியும் - இப்ப நீ தெரிஞ்சுக்க.
படம் - சேதுபதி ஐ.பி.ஸ்:
உனக்கு தண்டனை நான் கொடுக்கலை - இந்த நாடு கொடுக்கட்டும், இந்த நாட்டு மக்கள் கொடுக்கட்டும்.
படம் - கண்ணு படப் போகுதய்யா:
எம்மண்ணுல இப்படிப்பட்டவங்க இருக்குறாங்க அதை நெனச்சி நான் ரொம்ப பெருமைப்படுறேன்...
படம் - விருதகிரி:
உளவுத்துறையப் பத்தி எனக்கும் தெரியும் - ஆனா, என்னை கண்காணிக்கிற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலையே.
படம் - நரசிம்மா:
என்னைத் துளைக்கும் தோட்டா இன்னும் கண்டுபிடிக்கலை...
படம் - கேப்டன் பிரபாகரன்:
நான் கவர்ன்மென்ட் சர்வன்ட் தான்... ஆனால், கவர்னமென்ட் மக்களோட சர்வன்ட்.
படம் - தவசி:
துளசி கூட வாசம் மாறினாலும் மாறும், இந்த தவசி வார்த்தை மாற மாட்டான்.
படம் - ஏழை ஜாதி:
நான் ஏழைகளில் ஒருவனாக இருக்கக் தான் ஆசைப்படறேன்.
படம் - மாநகர காவல்:
தப்பு பண்ணா தர வேண்டியது தண்டனையா சன்மானமா?
படம் - ரமணா:
மன்னிப்பு தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை
படம் - தவசி:
எனக்கு அன்பாகப் பேசவும் தெரியும் - அவசியப்பட்டா அருவா வீசவும் தெரியும்.
படம் - நரசிம்மா:
சாதாரண மனுஷனுக்குத் தான் கரன்ட தொட்டா ஷாக் அடிக்கும், நான் நரசிம்மா என்னை தொட்டா அந்த கரண்டுக்கே ஷாக் அடிக்கும்.
"என்கிட்ட இருந்து எது போனாலும் கவலை இல்லை...
மக்கள் மனசுல சின்னதா
ஒரு இடம் இருக்குல்ல
எனக்கு அது போதும்..."
அவர் மறைந்த தினமான டிசம்பர் 28 அன்று அவரை மனமார வாழ்த்தி வணங்குவோம்.