நான்சி மலர்
மார்கழி மாதத்தையும், கோலத்தையும் பிரிக்க முடியாது. மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலை எழுந்து அழகழகாய் வாசலில் கோலங்கள் போடுவது தமிழர்களின் பாரம்பரிய பழக்கத்தை பறைசாற்றுகிறது.
கோலம் போடும் பழக்கம் தமிழர்களிடம் பழங்காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது. இதைப் பற்றி சங்ககால இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 13 நூற்றாண்டின் கல்வெட்டிலும் காணப்படுகிறது.
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு இறைவனை வழிப்படுவது சிறப்பாக கருதப்படுகிறது.
வாசலில் கோலமிடுவது நேர்மறை ஆற்றலை ஈர்த்து, சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்தி, இறைவனை வீட்டிற்கு வரவேற்கும் முறையாகும். இது பெண்கள் மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது.
சாணம் தெளித்து கோலமிடுவதால் கிருமிகள் அழிந்து சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கும். அரிசி மாவில் கோலம் போடுவது எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் உணவாக அமைகிறது.
பெண்கள் மார்கழி மாத குளிரில் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது மனதிற்கு உற்சாகத்தை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது.
வாசலில் கோலம் போடுவதால் தீயசக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை அண்டாது என்ற நம்பிக்கை மக்களிடையே உண்டு.
கோலங்கள் இந்தியாவில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் 'ரங்கோலி' என்றும் மேற்கு வங்கத்தில் 'அல்பனா' என்றும் அழைக்கிறார்கள்.
பெண்கள் போடும் சிக்கு கோலம் கணித வடிவமைப்பையும், பண்புகளையும் கொண்டுள்ளது. இது அவர்களின் புத்திகூர்மையை அதிகரிக்கிறது.
வீட்டின் வாசலில் கோலமிடுவது மங்களகரமாக கருதப்படுகிறது. இது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும், லக்ஷ்மி கடாட்சத்தையும் அளிக்கிறது.