நான்சி மலர்
தாமரை, இந்தியாவின் தேசிய மலர் ஆகும். இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அதிகாரப்பூர்வமாக தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. தாமரை தூய்மை, அழகு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
15-ஆம் நூற்றாண்டில் "ரோஜாக்களின் போர்" முடிவுக்கு வந்த பிறகு, அமைதியின் அடையாளமாக இங்கிலாந்தின் தேசிய மலர் டியூடர் ரோஜாவை ஏற்றுக்கொண்டார்கள். சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜா ஆகிய இரண்டு ரோஜாக்களையும் ஒருங்கிணைத்து உருவானது.
பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை ஆகும். மல்லிகை, அதன் நறுமணம் மற்றும் தூய்மையான தோற்றம் காரணமாக தேசிய மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் நாள் மலேசிய அரசாங்கம் செம்பருத்தியை தேசிய மலராக அறிவித்தது. மலாய் மொழியில், இது "புங்கா ராயா" என்று அழைக்கப்படுகிறது. "புங்கா" என்றால் மலர், "ராயா" என்றால் கொண்டாட்டம் என்று பொருள்.
தென் கொரியாவின் தேசிய மலரான ஷரோனின் ரோஜா. இது கொரிய மக்களின் நெகிழ்ச்சி, விடாமுயற்சி, நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. எப்போதும் மலரும் தன்மையின் காரணமாக ஷரோனின் ரோஜா தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஐரிஸ் மலர் பிரெஞ்சு முடியாட்சியின் சின்னமாகவும், பிரெஞ்சு தேசிய அடையாளம் மற்றும் நேர்த்தியையும், கடின உழைப்பையும் குறிக்கிறது.
செர்ரி மலர் (சகுரா) மற்றும் கிரிஸான்தமம் (கிக்கு) ஆகிய இரண்டும் தேசிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டு, ஜப்பானிய கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் கோல்டன் வாட்டில் (Golden Wattle) ஆகும். இது ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளமாகவும், நாட்டின் தேசிய நிறங்களான பச்சை மற்றும் தங்க நிறங்களை பிரதிபலிக்கிறது.
நெதர்லாந்திற்கு தேசிய மலர் எதுவும் இல்லை. ஆனால், தேசிய மலர் போல துலிப் மலர் பரவலாக அறியப்படுகிறது. துலிப் மலர் தோட்டங்கள் மற்றும் ஏற்றுமதிகளுக்காக நெதர்லாந்து மிகவும் பிரபலமாக உள்ளது.
இலங்கையின் தேசிய மலராக Blue Water lily 1986 ஆம் ஆண்டு தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. இதை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், நாட்டின் கலாச்சாரத்திலும், வரலாற்றிலும் இருப்பதும், இலங்கையின் நீர்நிலைகளில் பரவலாக வளர்வதுமேயாகும்.