நான்சி மலர்
கிறிஸ்மஸ் சீசன் வந்துவிட்டது. இந்த குதுகலமான சமயத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மக்களாலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
கிறிஸ்மஸ் என்றாலே கிறிஸ்மஸ் தாத்தாவும் அவருடைய பிரகாசமான சிவப்பு உடையும் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் சாண்டா கிளாஸ் சிவப்பு ஆடைக்கு முன்பு பச்சை நிறத்தில் தான் ஆடை அணிந்திருந்தார்.
'Jingle bells' என்ற பாடலை கேட்டதும் உடனே அது கிறிஸ்மஸ் பாடல் என்று சொல்வோம். ஆனால், இது கிறிஸ்மஸ்கான பாடல் அல்ல. இந்த பாடல் நன்றி தெரிவிக்கும் விருந்துக்காக எழுதப்பட்டது.
கிறிஸ்மஸ் அன்று நாம் கேக் வெட்டிக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கோம். ஆனால், ஜப்பானில் கிறிஸ்மஸ் அன்று KFC உணவகங்களில் சாப்பிடுவதை பாரம்பரியமாக வைத்திருக்கிறார்கள்.
சில நாடுகளில் கிறிஸ்மஸ் மரத்தில் உருளைக்கிழங்கை மறைத்து வைப்பார்கள். இதை ஒரு அதிர்ஷ்ட விளையாட்டாக அவர்கள் கருதுகிறார்கள்.
நார்வே இங்கிலாந்திற்கு கிறிஸ்மஸ் பரிசாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய கிறிஸ்மஸ் மரத்தை அனுப்புகிறது.
கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்க மின்சார விளக்குகளை பயன்படுத்துகிறோம். இது கிறிஸ்மஸ் மரத்தின் அழகை மேலும் கூட்டுகிறது. இப்படி மின்சார விளக்கு பயன்படுத்தப்படுவது 1882ல் இருந்து தொடங்கியது.
பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு வழங்கிய சுதந்திர தேவி சிலை(Statue of Liberty) தான் உலகின் மிகப்பெரிய கிறிஸ்மஸ் பரிசாகக் கருதப்படுகிறது. இது 1886 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இது ஒரு வகையான Plum கஞ்சியாக இருந்தது. காலப்போக்கில் அதில் உலர்ந்த பழங்கள், தேன் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, சுவையான கிறிஸ்மஸ் கேக்காக உருமாறியது.
ஜெர்மனி மற்றும் உக்ரைனில் கிறிஸ்மஸ் மரத்தில் சிலந்தி மற்றும் சிலந்தி வலை அலங்காரங்கள் செய்வது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.
பலர் 'X-mas' என்று எழுதுவது கிறிஸ்மஸை அவமதிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், கிரேக்க மொழியில் 'X' என்பது கிறிஸ்து (Christ) என்பதன் முதல் எழுத்து. அதனால்தான் சுருக்கமாக X-mas என்று அழைக்கப்படுகிறது.