மணிமேகலை பெரியசாமி
விசில் என்றால் ஒரு சாதாரண கருவி என்று நினைக்கிறோம். ஆனால், உலகின் பல்வேறு கலாச்சாரங்களிலும், வரலாற்றிலும் விசில் கருவிக்கும், விசிலடிப்பதற்கும் சிறப்பான இடம் உண்டு.
பழங்காலத்தில் எலும்புகள் அல்லது மரத்தால் செய்யப்பட்ட பழமையான விசில்கள் கற்கால மனிதர்களால் பயன்படுத்தப்பட்டன.
துருக்கியின் கருங்கடல் பகுதியில் உள்ள 'குஸ்கோய்' என்ற கிராமத்தில் உள்ள மக்கள் விசிலை ஒரு மொழியாகப் பேசுகிறார்கள். இதற்கு 'பறவை மொழி' என்று பெயர்.
பழங்கால மாலுமிகள் கப்பலில் விசிலடிப்பதை ஒரு சகுனத் தடையாகக் கருதினர். விசிலடித்தால் பலத்த காற்று வீசி புயல் வரும் என்று அவர்கள் நம்பினர்.
பழங்கால விசில் கடிகாரங்களில், நேரம் வந்ததும் விசில் சத்தத்தை எழுப்பும் அமைப்பு இருந்தது. இது மணி அடிப்பதற்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டது.
மனித உடலில் எந்த ஒரு வெளிப்புற கருவியும் இல்லாமல் இசையை உருவாக்கக்கூடிய ஒரே 'காற்று இசைக்கருவி' வாய் மற்றும் உதடுகள் தான்.
டெக்சாஸில் 'International Whistlers Convention' என்ற பெயரில் விசிலடிப்பதற்கென்றே உலக அளவிலான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
தொடக்க கால நீராவி ரயில் என்ஜின்களில் பயன்படுத்தப்பட்ட விசில், நீண்ட தூரம் கேட்கக்கூடிய, அதிக அழுத்தத்துடன் கூடிய நீராவி விசில் ஆகும்.
உலகிலேயே அதிக சத்தமாக விசிலடிக்கக் கூடிய நபர் 125 டெசிபல் வரை சத்தம் எழுப்பியுள்ளார். இது ஒரு ஜெட் விமானம் புறப்படும்போது ஏற்படும் சத்தத்திற்கு சமமானது!
விசிலடிப்பது உங்கள் உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது ஒரு சிறந்த 'Stress Buster'.
விசிலடிக்கும்போது உங்கள் மூளையின் இரு பகுதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.
டால்பின்கள் ஒவ்வொன்றும் தமக்கென ஒரு தனித்துவமான 'விசில் சிக்னலை' வைத்திருக்கின்றன. இது மனிதர்களின் பெயர்களைப் போன்றது.
விசில் என்பது ஒரு சைகை மொழி. ஒருமுறை ஊதினால் 'கவனம்', இரண்டு முறை ஊதினால் 'ஆட்டம் தொடக்கம்' எனப் பல அர்த்தங்கள் உண்டு.
புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பலர் தங்கள் பாடல்களில் விசிலை ஒரு முக்கிய பின்னணி இசையாகப் பயன்படுத்தியுள்ளனர்.