நான்சி மலர்
உலகில் பல அழகான படிகங்கள் உள்ளன. அவை அவற்றின் நிறம், வடிவம் மற்றும் அபூர்வத்தன்மைக்காக போற்றப்படுகின்றன. அவற்றில் மிக அழகான 10 படிகங்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
Amethyst ஊதா நிறத்தில் இருக்கும் படிகம். இது பிரபலமான மற்றும் பார்ப்பதற்கு அழகான படிகமாகும். இது அமைதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் அடையாளமாக கருதப்படுகிறது.
Rose Quartz மென்மையான இளஞ்சிவப்பில் காணப்படும் படிகம். இது பார்ப்பதற்கு இதமாக இருக்கும்.
Opal படிகங்களை பார்க்கும் போது இது தனக்குள் ஒரு பிரபஞ்சத்தையே வைத்திருப்பது போல தோன்றும். இதன் பல நிறங்களும், இது மின்னுவதும் அழகாக இருக்கும்.
Labradorite இந்த கல்லில் Labradorescence எனப்படும் ஒளி பிரதிபலிப்பு ஏற்படும். இந்த கல்லை நகர்த்தும் போது மயில் கழுத்து நீலம், பச்சை, தங்க நிறங்கள் தெரியும்.
Lapis lazuli பண்டைய காலத்தில் அரசர்களால் விரும்பப்பட்ட கல்லாகும். இது ஆழ்ந்த நீல நிறத்தில் தங்க நிற புள்ளிகளுடன் காணப்படும்.
Aquamarine கடல் நீரைப்போன்று நீல நிறத்தில் காணப்படும். இது தூய்மை மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக காணப்படுகிறது.
Fluorite இந்த கல்லில் ஊதா, பச்சை என்று நிறங்கள் அடுக்குகளாக அமைந்திருக்கும். இது பார்ப்பதற்கு அற்புதமான வண்ணக்கலவையாக இருக்கும்.
Citrine இது 'வெற்றியின் கல்' என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள், தங்கம், ஆரஞ்சு நிறங்களை கொண்டு சூரிய ஒளியைப் போன்ற பிரகாசத்தை தரும்.
Malachite இது பார்ப்பதற்கு ஒரு ஓவியம் போன்று இருக்கும். அடர்பச்சை நிறத்தில் வட்டமான கோடுகளுடன் காணப்படும்.
Selenite இது ஒளியை ஊடுருவ விடக்கூடிய தன்மையைக் கொண்டது. பனிப்போன்று வெள்ளை நிறத்தில் காணப்படும். இது நிலவின் ஒளியை போல அமைதியை தரும்.