நான்சி மலர்
நம் நகங்களை பத்திரமாக பராமரித்து பார்த்துக் கொள்வது நம்முடைய அழகை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான விஷயமாகவும் கருதப்படுகிறது.
வீட்டில் பெண்கள் பாத்திரம் கழுவும் போதும், துணி துவைக்கும் போதும் கையுறைகளை அணிந்துக் கொள்வது ரசாயனத்தில் இருந்து கைகளையும், நகங்களையும் பாதுகாக்கும்.
நகங்களில் தினமும் மாய்ஸ்டரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது நகங்கள் வறண்டு போவதை தடுக்கும்.
நகங்களை கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நகத்தை கடிப்பதால் நகம் சேதமடைவது மட்டுமில்லாமல் நோய்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
நகங்களை வெட்டுவதற்கும், அழகாக வடிவமைக்கவும் தூய்மையான நகம் வெட்டும் கருவிகளை பயன்படுத்தவும்.
நகத்தில் போட்டிருக்கும் நெயில் பாலிஷ்ஷை உரிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவ்வாறு செய்யாமல் நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துவது சிறந்தது.
புரதம், வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நகங்கள் நன்றாக ஆரோக்கியமாக வளர உதவும்.
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் நகங்கள் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
நகங்களை தூய்மையாக வைத்திருப்பது அழுக்கு சேர்வதை தடுக்கும். இதனால் நோய்தொற்று ஏற்படாமல் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
நகங்களை பளபளப்பாக பிரகாசாமாக வைத்திருக்க எழுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம்.
நகங்களை அழகாக காட்ட வேண்டும் என்று அடிக்கடி செயற்கை நகங்கள், நெயில் பாலிஷ்கள் போடுவதை குறைத்துக் கொண்டு நகங்களுக்கு ஓய்வுக் கொடுங்கள்.