மகாலெட்சுமி சுப்ரமணியன்
1/10. வில்வ மரத்தின் கட்டையுடன் சந்தனம் சேர்த்து இழைத்து தடவி வர, புண் குணமாகும். கருமை மறையத் தொடங்கும்.
2/10. புண் ஏற்பட்ட இடத்தில் ஆலிவ் ஆயில் உடன் மஞ்சள் தூள் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி வர கருமை குறையும்.
3/10. கருந்துளசி சாறு தடவி வர, புண் ஆறி கருமை போகும்.
4/10. மஞ்சள், சந்தனத்தை, தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து கருமை படர்ந்த இடத்தில் தடவி கழுவி வந்தால் கருமை மறையத் தொடங்கும்.
5/10. செஞ்சந்தனம், மஞ்சிஷ்டாதி தைலம், ஆவாரம்பூ பொடி, மல்லிகை தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை பேஸ்ட் ஆக்கி அதை கருமை உள்ள இடத்தில் தடவி பின்கழுவி வர கருமை மாறும். தோல் பழைய நிறத்திற்கு மாறும்.
6/10. வில்வக் காயை பசும்பால் விட்டு அரைத்து அதை இரவில் நெற்றியில் தடவி பின் கழுவி வந்தால் கருமை காணாமல் போகும்.
7/10. மஞ்சள் தூள், முல்தானி மட்டி, வி ளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கருமை உள்ள இடத்தில் தடவி பின் கழுவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
8/10. மருத்துவ ஆலோசனை பெற்று கிரீம் வகைகளை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
9/10. நெற்றி பொட்டு வைக்கும் போது குங்குமம் தரமானதாக வாங்கி உபயோகிக்க வேண்டும்.
10/10. நெற்றிக்கு இடும் முன்பு வேக்ஸ் வைத்து விட்டு பின் வைக்க தோல் கருமை, அலர்ஜி ஏற்படாது.