எஸ்.ராஜம்
நகைகளை நல்ல பட்டுத்துணியால் ஈரம், வியர்வைபோக துடைத்து மரப்பெட்டியில் வைத்தால் பளபளப்பு குறையாமல் இருக்கும்.
வைரம் போன்ற கல் இழைத்த நகைகளில், நல்ல ஷாம்பு கலந்த நீரில் கழுவி பருத்தித்துணியால் துடைத்துவிட்டு பெட்டியில் வைக்கவேண்டும்.
தங்க நகைகளோடு கவரிங் நகைகளை சேர்த்து அணிந்தால் தங்க நகைகள் தேய்ந்துவிடும்.
தங்க, வைர வளையல்களை அணிந்து பாத்திரம் தேய்த்தால் தேய்ந்துவிடும். ஆதலால் அவைகளை கழற்றி வைத்துவிட்டு தேய்க்க வேண்டும்.
பூந்தி கொட்டைகளை வெந்நீரில் ஊறவைத்து, அதில் நகைகளை சுத்தம் செய்தால் அழுக்குகள் அகன்றுவிடும்.
நகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அதற்கான பெட்டிகளில் வைக்கவேண்டும். ஒன்றுடன் இன்னொன்று சேர்ந்தால் உராய்வு ஏற்பட்டு தேய்ந்துவிடும்.
விசேஷங்களுக்காக வெளியில் செல்லும்போது, மேக்கப் முழுவதையும் முடித்துவிட்டு நகைகளை அணியவேண்டும். திரும்பியதும் முதலில் நகைகளை கழற்றவேண்டும்.
சர்க்கரை கரைத்த நீரில் நகைகளை ஊறவிட்டு எடுத்து துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.
பயன்பாட்டில் இல்லாதபோது, வெள்ளி நகைகளை காற்று புகாத பைகள் அல்லது கறைபடாத துணி பைகளில் சேமித்து வைக்கவும்.
தங்க நகைகளை அளவோடு அணிந்தால் அழகு. அழகுக்கு மீறினால் ஆடம்பரம், ஆபத்தும் கூட.