வெறும் 5 நிமிடத்தில் ஆபீஸ் மேக்கப்! யாருக்கும் தெரியாம அழகா மாறுவது எப்படி?

நான்சி மலர்

1/10. மேக்கப் போடுவதற்கு முன் உங்கள் முகத்தை ஒரு நல்ல ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவி, சுத்தமாக துடைத்துக் கொள்ளுங்கள். இது மேக்கப் சமமாக படிய உதவும்.

Minimalist Makeup tips | credit AI image

2/10. உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது சருமத்தை வறண்டு போகாமல் மென்மையாக வைத்திருக்கும்.

Minimalist Makeup tips | credit AI image

3/10. பகல் நேரமாக இருந்தால், SPF 30+ உள்ள சன்ஸ்கிரீன் லோஷனை மறக்காமல் தடவிக் கொள்ளுங்கள். இது வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

Minimalist Makeup tips | credit AI image

4/10. மினிமலிஸ்ட் மேக்கப்பிற்கு கனமான ஃபவுண்டேஷன் தேவையில்லை. அதற்குப் பதிலாக லேசான பிபி கிரீம் அல்லது சிசி கிரீம் பயன்படுத்தினால் முகம் இயற்கையான நிறத்துடன் பொலிவாக இருக்கும்.

Minimalist Makeup tips | credit AI image

5/10. கண்ணுக்குக் கீழே உள்ள கரும்புள்ளிகள் அல்லது முகப்பரு வடுக்கள் இருந்தால், அந்த இடங்களில் மட்டும் லேசாக கன்சீலர் தடவி விரல்களால் மெதுவாக தேய்த்து மறைக்கவும்.

Minimalist Makeup tips | credit AI image

6/10. காம்பேக்ட் பவுடர் அல்லது லூஸ் பவுடரை ஒரு பிரஷ் மூலம் முகம் மற்றும் கழுத்து பகுதியில் லேசாக ஒத்தி எடுக்கவும். இது முகத்தில் எண்ணெய் வழியாமல் தடுக்கும்.

Minimalist Makeup tips | credit AI image

7/10. புருவங்களை ஐப்ரோ பென்சில் கொண்டு தடிமனாக வரையாமல், லேசாக சீவி (Spoolie Brush கொண்டு) காலியாக உள்ள இடங்களில் மட்டும் லேசான நிறம் கொடுத்து இயற்கையாக காட்டவும்.

Minimalist Makeup tips | credit AI image

8/10. கண்களுக்கு லேசாக காஜல் (கண் மை) எழுதலாம். கண்களை பெரியதாக காட்ட மஸ்காராவை இமைகளில் மட்டும் தடவிக் கொள்ளுங்கள். ஐலைனர் தேவையில்லை.

Minimalist Makeup tips | credit AI image

9/10. உதடுகளுக்கு லேசான நிறமுள்ள லிப் பாம் (Tinted Lip Balm) அல்லது உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற நியூட் / லைட் பிங்க் லிப்ஸ்டிக் பயன்படுத்தவும்.

Minimalist Makeup tips | credit AI image

10/10. உங்கள் கன்னங்கள் இயற்கையாக சிவந்து இருப்பது போல காட்ட, மிகக் குறைந்த அளவு பிங்க் அல்லது பீச் நிற ப்ளஷ்-ஐ கன்னங்களின் மேல்பகுதியில் லேசாக தடவலாம்

Minimalist Makeup tips | credit AI image
The benefits of eating curry leaves
கறிவேப்பிலையை தூக்கி வீசுபவரா நீங்க? இந்த தகவலைப் படிச்சா இனிமே அப்படியே சாப்பிடுவீங்க!