நைட்டி முதலில் ஆண்களுக்கான உடையா? நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

கிரி கணபதி

பெண்கள் வீடுகளில் சாதாரணமாக அணியும் நைட்டி உடையின் பின்னால் பல சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. 

Nighty

1. இது விக்டோரியா காலத்தில் செல்வந்தர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. அப்போது இது உறங்குவதற்கான சிறப்பு உடையாக மட்டுமே கருதப்பட்டது.

Nighty

2. தொடக்க காலத்தில் ஆண்களும் நீண்ட நைட்டி போன்ற உடைகளை அணிந்தனர். காலப்போக்கில் இது முற்றிலும் பெண்களுக்கான உடையாக மாறியது.

Nighty

3. பிரிட்டிஷ் ஆட்சியின் மூலமே இந்த உடை இந்தியாவிற்குள் நுழைந்தது. தற்போது இது இந்தியப் பெண்களின் அன்றாட உடையாகவே மாறிவிட்டது.

Nighty

4. மேலை நாடுகளில் இதனை 'நைட் கவுன்' என்றே அழைப்பார்கள். இந்தியாவில் மட்டுமே இந்தப் பெயர் 'நைட்டி' என மருவியது.

Nighty

5. ஆரம்பத்தில் விலையுயர்ந்த பட்டுத் துணிகளில் மட்டுமே இவை தைக்கப்பட்டன. தற்போது பருத்தித் துணிகளில் பரவலாகத் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

Nighty

6. இது இரவில் அணியும் உடையாகவே முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இன்று வீடுகளில் பகலிலும் அணியும் வசதியான உடையாகிவிட்டது.

Nighty

7. இறுக்கமில்லாத இந்த உடை ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கிறது. இதனால் இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கப் பெரிதும் உதவுகிறது.

Nighty

8. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றவாறு ஜிப் வைத்து பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டன. இதனால் இது சிறந்த தாய்மைக்கால உடையாக உலகெங்கும் போற்றப்படுகிறது.

Nighty

9. இந்தியாவில் சில கிராமங்களில் பகலில் நைட்டி அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் அங்கு இன்றும் உள்ளது.

Nighty

10. இந்திய ஆடைகள் சந்தையில் நைட்டி விற்பனை பெரும் பங்கு வகிக்கிறது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Nighty

இரவு உடையாக அறிமுகமாகி இன்று பெண்களின் விருப்பமான பகல் உடையாக நைட்டி உருமாறியுள்ளது. இதன் அதீத சௌகரியமே இதன் மிகப்பெரிய வெற்றியாகும்.

Nighty
Snake
​10 அடி தள்ளியிருந்தே விஷப் பாம்பைக் கண்டுபிடிப்பது எப்படி? தப்பிக்க சூப்பர் ட்ரிக்ஸ்!