நான்சி மலர்
Bugadi design
1. தமிழகத்தில் 'கொப்பு' (Koppu) என அழைக்கப்படும் இந்த பாரம்பரிய மேல் காதணி, தற்போது 'புகடி' (Bugadi) என்ற பெயரில் நவீன வடிவமைப்புகளுடன் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.
2. முன்பெல்லாம் காதின் மேல் பகுதியில் (Helix) துளையிட்டால் மட்டுமே அணிய முடிந்தது. ஆனால் இப்போது 'பிரஸ்-ஆன்' (Press-on) மற்றும் 'கிளிப்-ஆன்' (Clip-on) வகைகள் வந்துவிட்டதால், வலியின்றி யார் வேண்டுமானாலும் அணிய முடிகிறது.
3. ஒரே காதில் பல ஆபரணங்களை அடுக்கடுக்காக அணியும் (Ear Stacking) நவீன ஃபேஷன் இளம்பெண்களிடம் பிரபலமாகி வருவதால், புகடி இதற்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.
4. பட்டுப்புடவை, சுடிதார் போன்ற பாரம்பரிய உடைகளுக்கு மட்டுமின்றி, குர்தி மற்றும் வெஸ்டர்ன் (Indo-western) ஆடைகளுக்கும் நச் என்று பொருந்துகிறது.
5. தங்கம் மட்டுமின்றி 92.5 வெள்ளி (Silver), ஆக்ஸிடைஸ்டு (Oxidised), குந்தன் (Kundan) மற்றும் முத்து வேலைப்பாடுகளுடன் மிகக் குறைந்த விலையிலும் ஆன்லைனில் கிடைக்கிறது.
6. பெரிய ஜிமிக்கிகளைப் போல காதுகளுக்குப் பாரம் தராமல், மிக லேசாகவும் நாள் முழுவதும் அணிவதற்குச் சௌகரியமாகவும் உள்ளது.
7. சினிமா நட்சத்திரங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ஃபேஷன் இன்ஃப்ளூயன்சர்கள் பட்டுப்புடவையுடன் இதை அணிந்து புகைப்படங்களைப் பதிவிடுவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
8. காதின் மேல் ஓரத்தில் அழகாகப் பதிந்திருப்பதால், சாதாரண தோடு அணிந்தாலும் முகத்திற்கு ஒரு ராயல் மற்றும் தனித்துவமான லுக்கைத் தருகிறது.
9. மணப்பெண்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் வித்தியாசமான லுக் வேண்டும் என நினைப்பவர்களின் முதல் தேர்வாக புகடி மாறியுள்ளது.
10. காதின் மேல் பகுதியில் உள்ள நரம்புப் புள்ளிகளை (Marma points) இது தூண்டுவதால், மன அமைதி மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற பாரம்பரிய நம்பிக்கையும் இதற்குக் காரணமாக அமைகிறது.